Lal Salaam: “ஓவர் பில்டப்... ரஜினி போர்ஷனில் கை வைத்த ஐஸ்வர்யா..” ஃபைனல் வெர்ஷன் லால் சலாம் ரெடி!
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் லால் சலாம் படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினியின் போர்ஷனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம்.
லால் சலாம் ஃபைனல் வெர்ஷனில் மாற்றம்
லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இவர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். தனுஷின் 3 படத்திற்குப் பின்னர் லால் சலாம் மூலம் ஐஸ்வர்யா இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். முக்கியமாக தனுஷை பிரிந்த பின்னர் அவரது முதல் படமாக லால் சலாம் உருவாகியுள்ளது.

இதனால் மகளுக்காக கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்துள்ளார் ரஜினி. மும்பை கேங்ஸ்டர் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினி நடித்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் ரஜினியின் காட்சிகள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மட்டுமே இடம்பெறும் என சொல்லப்பட்டது. இருப்பினும் ரஜினி என்ட்ரியாகும் சீன் முதல் கடைசி வரை தாறுமாறான சம்பவங்கள் கன்ஃபார்ம் என லால் சலாம் படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் என் அப்பா சங்கி இல்லை என ஐஸ்வர்யா பேசியது வைரலாகி வந்தது. அதன் பின்னர் ரஜினியும் ஐஸ்வர்யா பேசியது பற்றி விளக்கம் கொடுத்திருந்தார். இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதாவது லால் சலாம் பட ப்ரோமோஷனுக்காக நான் எனது அப்பா ரஜினியை பற்றி அப்படியெல்லாம் பேசவில்லை என்றிருந்தார்.
அப்பாவின் அடையாளத்தை பயன்படுத்தி லால் சலாம் படத்துக்கு பப்ளிசிட்டி செய்ய மாட்டேன். அப்படித்தான் இந்தப் படம் ஓட வேண்டும் என்றால் அது வேண்டவே வேண்டாம் என பேசியிருந்தார். ஏற்கனவே ரஜினியின் போர்ஷன் ரொம்ப குறைவு என்பதால் ஐஸ்வர்யாவின் இந்த பேச்சு இன்னும் வைரலானது. இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினியின் போர்ஷனை அதிகமாக்கியுள்ளாராம் இயக்குநர் ஐஸ்வர்யா.
ரஜினியின் காட்சிகள் 10 முதல் 20 நிமிடங்கள் மட்டும் இருந்தால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம். எனவே அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாகவும், படத்தின் வெற்றிக்காகவும் ரஜினியின் காட்சிகளை ஐஸ்வர்யா அதிகப்படுத்தியுள்ளாராம். இதனால் இரண்டாம் பாதியில் பெரும்பாலும் ரஜினியின் காட்சிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இது லால் சலாம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதிகரிக்கவும் உதவும் என படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
முன்னதாக டிசம்பர் இறுதியில் லால் சலாம் படத்தின் பேட்ச்வொர்க் ஷூட்டிங் அவசரமாக நடைபெற்றது. அதில் ரஜினியும் கலந்துகொண்டு நடித்திருந்தார். அப்போது தான் லால் சலாம் படத்திற்காக ரஜினியின் காட்சிகள் எக்ஸ்ட்ராவாக எடுக்கப்பட்டதாம். லால் சலாம் படத்தில் ரஜினியின் போர்ஷன் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே லால் சலாம் படத்தின் சென்சார், ரன்னிங் டைம் அப்டேட்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











