Lal Salaam: பொங்கல் ரேஸில் இருந்து விலகிய லால் சலாம்.. எல்லாம் இதுக்காக தானா? லைகா கொடுத்த அப்டேட்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் லீட் ரோலில் நடித்துள்ள லால் சலாம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் லால் சலாம் திடீரென பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ளது.

பொங்கல் ரேஸில் இருந்து விலகும் லால் சலாம்

தனுஷின் 3 திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன்பின்னர் தனது இரண்டாவது படமாக லால் சலாமை இயக்கியுள்ளார். லைகா தயாரித்துள்ள லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஜெயிலர் மூலம் கம்பேக் கொடுத்த ரஜினி, லால் சலாம் படத்தில் தனது மகளுக்காக கெஸ்ட் ரோல் செய்துள்ளார்.

 Lal Salaam: Lyca to replace Rajinis Lal Salaam in Pongal Race with Mission Movie

லால் சலாமில் மும்பை ரிட்டர்ன்ஸ் 'மொய்தீன் பாய்' என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் ரஜினி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாட்ஷா படத்துக்குப் பின்னர் ரஜினி முஸ்லிம் கேரக்டரில் நடித்துள்ளதும் லால் சலாம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். அதேபோல் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து மத அரசியலை பேசியுள்ளது லால் சலாம். இந்தப் படத்தின் ட்ரெய்லரிலேயே கதையின் கருவை புரிந்துகொள்ள முடிந்தது. இதனால் லால் சலாம் பொங்கலுக்கு வெளியானால் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி படக்குழுவும் லால் சலாம் பொங்கல் ரிலீஸ் என்றே அறிவித்திருந்தது.

ஆனால், லால் சலாம் படத்தின் பேட்ச்வொர்க் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் தான் முடிந்துள்ளது. கடைசி நேரத்தில் அவசரமாக இந்த படப்பிடிப்பை நடத்தில் முடித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதனால் தற்போது இந்தப் படத்தின் எடிட்டிங் வேலைகள் முழுமையாக முடியவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து லால் சலாம் படத்தை பொங்கல் ரேஸில் இருந்து தள்ளி வைத்துள்ளது லைகா புரொடக்‌ஷன்ஸ்.

அதன்படி இந்தப் படம் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் லால் சலாமுக்கு பதிலாக அருண் விஜய்யின் மிஷன் படத்தை பொங்லுக்கு ரிலீஸ் செய்கிறது லைகா நிறுவனம். இதனை மட்டுமே அபிஸியலாக அறிவித்துள்ள லைகா, லால் சலாம் ரிலீஸ் குறித்து மூச்சுவிடாமல் அமைதி காத்து வருகிறது. அருண் விஜய்யுடன் நிமிஷா சஜயன், எமி ஜாக்சன், அபி ஹஸன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மிஷன் சாப்டர் 1 படத்தை விஜய் இயக்கியுள்ளார்.

முன்னதாக தனுஷின் கேப்டன் மில்லர் பொங்கல் தினத்தில் வெளியாவதால் தான் லால் சலாம் ரிலீஸ் தள்ளிப் போனதாக சொல்லப்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை என்றும், லால் சலாம் சிறப்பாக வந்துள்ளது என ரஜினியே சர்டிபிகேட் கொடுத்துள்ளதாகவும், அதனால் தனியாக ஜனவரி 26ம் தேதி களமிறங்கலாம் என அவரே சிக்னல் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியதால், ரஜினி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X