10 பாட்ஷாவுக்கு சமம் இந்த மொய்தீன் பாய்.. லால் சலாம் அப்டேட் கொடுத்த பிரபலம்.. தனுசுக்கு செக்கா?
சென்னை: ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்துக்கு மிகப்பெரிய ஹைப் உருவாகி உள்ள நிலையில், தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக லால் சலாம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோல் என்றே முதலில் கூறப்பட்ட நிலையில், எக்ஸ்டன்டட் கேமியோ ரோல் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இடைவேளை காட்சியில் மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் என்ட்ரி கொடுக்கும் சீன் தியேட்டரே தெறிக்கும் என செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் ரிவீல் செய்துள்ளார்.
தனுஷின் கேப்டன் மில்லருக்கு போட்டி: கணவர் தனுஷை பிரிந்த நிலையில், மீண்டும் புதிய படத்தை இயக்கி உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே நடிகர் தனுஷ் டிசம்பர் 15ம் தேதி கேப்டன் மில்லர் ப்டத்தை ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்து டீசர் வெளியிட்டுள்ள நிலையில், அந்த படத்துக்கு செக் வைக்கப் போகிறார் என்றே பெரும் பேச்சு அடிபட்டு வருகின்றன.
பத்து பாட்ஷாவுக்கு சமம்: ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த ஆண்டு ரசிகர்களை மொய்தீன் பாயாக லால் சலாம் படத்தின் மூலம் மகிழ்ச்சியில் ஆழ்த்த ரஜினிகாந்த் முடிவு செய்து விட்டார் என்கின்றனர்.

விஷ்ணு விஷால், விதார்த் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தில் இடைவேளை காட்சியின் போது ரஜினிகாந்தின் கேமியோ இருக்கும் என்றும் அந்த சீன் 10 பாட்ஷா படத்துக்கு சமமான வெயிட்டேஜ் உடன் மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் தீயாக திரையில் தோன்ற உள்ளார் என செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
200 கோடி சம்பளம்: ஜெயிலர் வெற்றியை சென்னையில் படக்குழுவினருடன் கொண்டாடிய ரஜினிகாந்த் சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து லைகா தயாரிப்பில் தலைவர் 170 படத்தில் நடிக்க அவருக்கு 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி கோலிவுட்டே வியப்பில் ஆழ்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











