Lal Salaam : ரஜினியை கெத்தாக்கி.. விஷ்ணு விஷாலை டம்மியாக்கிய ஐஸ்வர்யா.. டென்ஷனான நடிகர்!
சென்னை : லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷாலை டம்மியாக்கி ரஜினிகாந்த்தை படம் முழுவதும் கெத்தாக காட்டி படம் எடுத்து வருகிறார் ஐஸ்வர்யா.
கிரிக்கெட் மற்றும் அதன் பின்னணியில் நடைபெறும் அரசியலை மையமாக வைத்து தயாராகும் திரைப்படம் லால் சலாம்.
இதில்,விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லால் சலாம் : சூப்பர் ஸ்டாரின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியது.
மொய்தீன் பாய் : இதையடுத்து, மொய்தீன் பாய் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் தீயாக பரவியது.இத்திரைப்படம் மற்றொரு பாட்ஷா என ரஜினி ரசிகர்கள் படத்தைக்கொண்டாடி வருகின்றனர். மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் முதலில் மம்முட்டியை நடிக்க வைக்க இருந்த நிலையில், கதையை கேட்ட ரஜினி தானே அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு : லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மும்பையில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை படமாக்க 10 நாட்கள் ஷூட்டிங் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில்,படப்பிடிப்பு வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடந்தது. ரஜினியுடன் சேர்ந்து நடித்த நடிகர் வராததால் ரஜினி சென்னை திரும்பி விட்டார். இதையடுத்து, சென்னையில் செட் போட்டு மீதமுள்ள காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஷ்ணு விஷால் டம்மி : சுமார் 20 நிமிடங்கள் இப்படத்தில் ரஜினியின் காட்சிகள் இடம்பெறும் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதன் பின் போகப்போக விஷ்ணு விஷால் காட்சியை குறைத்துவிட்டு ரஜினி படத்தில் 40 நிமிடங்கள் வருவது போல் கதையே மாற்றிவிட்டார். அதனால் தற்போது இது முழுக்க முழுக்க ரஜினிகாந்த் படமாக தான் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. விஷ்ணு விஷால் படமாக இருந்தால் நிச்சயமாக வியாபாரம் ஆகாது என்று தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா அவரை டம்மியாக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











