Kapil dev birthday: கபில்தேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து.. க்யூட் போஸ்டரை வெளியிட்ட லால் சலாம் டீம்!
சென்னை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் தற்போது ரஜினிகாந்துடன் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி லால் சலாம் டீம் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்துடன் கபில்தேவ் இருக்கும்படியான புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அவருடைய வாழ்க்கை மற்றும் கேரியர் அனைவருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 1978ம் ஆண்டு முதல் தொடர்ந்து 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியவர் கபில்தேவ்.
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக இருந்த கபில்தேவ், பின்பு 1999ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பௌலராகவும் கபில்தேவ் சாதனை படைத்துள்ளார். அதேபோல 4 ஆயிரம் ரன்களும் 400 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஆல்ரவுண்டராக கபில்தேவ் இருந்து வருகிறார். 1982 முதல் 1984ம் ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட கபில்தேவ் இந்தியாவிற்கு உலக கோப்பையை பரிசாக பெற்றுக் கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி மட்டுமில்லாமல் ரசிகர்களின் கனவையும் அவர் நிறைவேற்றி வைத்தார்.

முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளவர். கடந்த 1982ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட கபில், இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பரிசாக பெற்றுக் கொடுத்தவர். சிறப்பான கேப்டன்சியால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த கபில்தேவ், டெஸ்ட், ஒருநாள் என கடந்த 1978ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை தொடர்ந்து 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்து சிறப்பான வழிநடத்துதலை செய்துள்ளார்.
லால் சலாம் படத்தில் கபில்:கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் லால் சலாம். நடிகர் ரஜினிகாந்த், இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினி, மூன்றாவதாக இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார். ஏப்ரலில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக பொங்கல் ரிலீசாக வெளியாகவிருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.
கபில்தேவ் பிறந்தநாள்: இந்தப் படத்தில் சூப்பர்ஸ்டாருடன் சூப்பர் பிளேயர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். முன்னதாக தன்னுடைய சமூக வலைதளப்பக்கம் மூலம் ரஜினிகாந்த் இதை உறுதிப்படுத்தியிருந்தார். கபில்தேவுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் கபில்தேவிற்கு இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. மேலும் ரஜினி, கபில் இருக்கும்படியான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.
லைகா வாழ்த்து: வெற்றிகளையும் தலைமை பண்பையும் சிறப்பாக கொண்ட கபில்தேவின் வெற்றிப்பயணம் அனைவருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளதாகவும் லைகா புரொடக்ஷன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்க்தில் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அவருக்கு சிறப்பாகவும் ஆரோக்கியத்தை கொடுப்பதாக அமையவும் வாழ்த்து தெரிவித்துள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படத்தில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











