Lal Salaam Teaser - ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம்.. லால் சலாம் டீசர் ரிலீஸ் அப்டேட் இதோ

சென்னை: Lal Salaam Teaser (லால் சலாம் டீசர்) ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் லால் சலாம் படத்தின் டீசர் எப்போது ரிலீஸ் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்களுக்கு முன்பு திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா குறித்த பணிகளில் ஆர்வமாக கவனம் செலுத்திவருகிறார்.

Lal Salaam Movie Teaser Will Release on November 12 At 10.45 AM


இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

லால் சலாம் இயக்கும் ஐஸ்வர்யா: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஷுட்டிங் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகளும் முடியும் தருவாயில் இருக்கின்றன. அண்மையில்தான் ரஜினிகாந்தும் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங் கொடுத்து முடித்தார்.

மொய்தீன் பாயாக ரஜினிகாந்த்: லால் சலாமில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். மும்பையில் அவர் தாதாவாக இருப்பார் என்றும் விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் ஒரு பிரச்னையில் இருந்து அவர் காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் கபில்தேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது.

டீசர் ரிலீஸ்: இந்நிலையில் லால் சலாம் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி டீசரானது தீபாவளி அன்று நவம்பர் 12ஆம் தேதி காலை 10.45 மணிக்கு வெளியாகும் என்று புதிய போஸ்டரோடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் போஸ்டரில் ரஜினிகாந்த் இஸ்லாமியர் கெட்டப்பில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். மேலும் கண்டிப்பாக டீசரும், படமும் வேற லெவலில் இருக்கும் என கூறிவருகின்றனர். படமானது அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X