Lal Salaam: ரஜினியுடன் AR ரஹ்மான்... ஒரே போட்டோவில் லால் சலாம் வெற்றியை கொண்டாடிய லைகா!
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மூன்றாவது படமாக வெளியாகியுள்ளது லால் சலாம். லைகா தயாரிப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோலில் நடித்த இந்தப் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோவாக மிரட்டியிருந்தார். லால் சலாம் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், தற்போது படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர்.
லால் சலாம் சக்சஸ் மீட்
தனுஷின் 3, கெளதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மகள் ஐஸ்வர்யாவுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியும் கேமியோவாக நடித்துக் கொடுத்திருந்தார். இதனால் லால் சலாம் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்த இந்தப் படம் கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து மத அரசியல் குறித்து பேசியிருந்தது. அதேபோல் ரஜினியின் மொய்தீன் பாய் கேரக்டருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. முதலில் 15 நிமிடங்கள் மட்டுமே ரஜினியின் காட்சிகள் இருக்கும் என தகவல் வெளியானது. ஆனால் முதல் பாதியில் 15 நிமிடங்களும், இரண்டாம் பாதியில் 40 நிமிடங்களுக்கும் அதிகமாகவே ரஜினியின் போர்ஷன் வைக்கப்பட்டிருந்தது.
இதனால் லால் சலாம் படத்துக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என படக்குழு எதிர்பார்த்தது. ஆனால் நெகட்டிவான விமர்சனங்களால் லால் சலாம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 20 கோடியை கூட தாண்டவில்லை. ஒட்டுமொத்தமாக லால் சலாம் டிசாஸ்டர் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் லால் சலாம் திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து லால் சலாம் படத்தின் வெற்றியை லைகா நிறுவனம் கொண்டாடியுள்ளது. லால் சலாம் ரிலீஸாகி இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு "மக்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி!!!" என ட்வீட் போட்டுள்ள லைகா, ஒரு போட்டோவையும் ஷேர் செய்துள்ளது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், ஏஆர் ரஹ்மானும் ஷோபாவில் அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் ஐஸ்வர்யா, லைகா தமிழ்குமரன் ஆகியோர் நிற்கின்றனர்.
இந்த போட்டோ தான் லால் சலாம் சக்சஸ் மீட்டா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி ட்ரோல் செய்து வருகின்றனர். லால் சலாம் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் தனது அப்பா ரஜினி சங்கி இல்லை என ஐஸ்வர்யா பேசியிருந்தார். அப்போது முதல் லால் சலாம் படம் மீதான எதிர்பார்ப்பு குறைய தொடங்கிவிட்டது எனவும், இது மோசமான தோல்வி என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











