Lal Salaam: நாளை முதல் ரஜினியின் லால் சலாம் திருவிழா... அதிரடியாக அப்டேட் கொடுத்த லைகா!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் பொங்கலுக்கு வெளியாகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், லால் சலாம் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு.
லால் சலாம் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தனது மகளுக்காக லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார் தலைவர். லைகா நிறுவனத்திற்காகவும் ரஜினி இதில் கமிட்டானது குறிப்பிடத்தக்கது.

அதாவது ரஜினியின் தலைவர் 170 படத்தை லைகா தயாரிக்க, இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவுக்கும் ஒரு படம் இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீட் ரோலில் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இவர்களுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவருமான கபில்தேவ்வும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார்.
கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள லால் சலாம், படத்தில் ரஜினி மும்பை டான் கேரக்டரில் நடித்துள்ளாராம். மொய்தீன் பாய் என்ற ரஜினியின் ரோல் செம்ம பவர்ஃபுல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, கடந்த வாரம் லால் சலாம் படத்தில் இருந்து மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதன் தொடர்ச்சியாக தற்போது லால் சலாம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசையில் 'தேர் திருவிழா' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இதனால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். அதேநேரம் இது ரஜினியின் இன்ட்ரோ பாடலாக இருக்க வாய்ப்பில்லை எனவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஒரேயொரு பாடல் தான் உள்ளதாம்.
இந்நிலையில் நாளை லால் சலாம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானதும், அதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழா பற்றிய அப்டேட் வரும் என சொல்லப்படுகிறது. லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில், படத்தின் ட்ரெய்லரும் ரிலீஸாகும் எனத் தெரிகிறது. பொங்கலுக்கு வெளியாகும் லால் சலாம் படத்துக்குப் போட்டியாக தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்களும் ரிலீஸாகின்றன.


Click it and Unblock the Notifications











