Lal Salaam: அட லால் சலாம் மொய்தீன் பாய் நம்ம மாணிக் பாட்ஷாவா... ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட் தான்!
மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினி நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
இதனையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார்.
இதனையடுத்து லால் சலாம் படத்தில் ரஜினியின் கேரக்டரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

மொய்தீன் பாய் என்ற ரஜினியின் கேரக்டர், பாட்ஷா படத்தின் மாணிக் பாட்ஷா தான் என சொல்லப்படுகிறது.
மாணிக் பாட்ஷா டூ மொய்தீன் பாய்
சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து தரமான அப்டேட் வெளியாகி சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறது. கடந்த வாரம் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தில் இருந்து ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்ட ரஜினி, அடுத்து லால் சலாம் படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார். ஐஸ்வர்யா இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார். லைகா தயாரிக்கும் இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாகக் கொண்டு உருவாகி வருகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் கேரக்டரில் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கேரக்டரில் ரஜினி நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் என்ற கேப்ஷனுடன் ரஜினியின் மாஸ்ஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ரஜினி டான் லுக்கில் மிரட்டும் இந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாட்ஷாவுக்குப் பிறகு லால் சலாம் படத்தில் ரஜினி முஸ்லிம் கேரக்டரில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் கேரியரில் பாட்ஷா திரைப்படம் தான் மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தனர். ஆனால், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் அதற்கு வாய்ப்பே இல்லை எனக் கூறிவிட்டனர். ஆனால், பாட்ஷா படத்தின் மாணிக் பாட்ஷா கேரக்டரின் தழுவலாக மொய்தீன் பாய் இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதனை குறிப்பிடும் விதமாக தான் "அனைவருக்கும் விருப்பமான பாய் மீண்டும் மும்பையில்" என படக்குழு லீட் கொடுத்துள்ளதாம். மேலும், மொய்தீன் பாய் கேரக்டர் முழுவதும் மாணிக் பாட்ஷாவாக இல்லாமல், அதன் சாயலுடன் செம்ம பவர்ஃபுல்லாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஜினியின் காட்சிகள் அனைத்தும் மும்பையில் ஒரேகட்டமாக படமாக்கப்பட உள்ளதாம். ஒரே ஷெட்யூலில் லால் சலாம் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, அடுத்ததாக தலைவர் 170 படப்பிடிப்பில் கலந்துகொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி பிளான் செய்துள்ளாராம். அதனால், இன்னும் ஓரிரு மாதங்களில் தலைவர் 170 படப்பிடிப்பும் தொடங்கும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











