Lal Salaam: மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்... ரஜினியின் மிரட்டல் லுக்கில் லால் சலாம் போஸ்டர்!

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லால் சலாம் படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார்.

மும்பையில் ரஜினி சம்பந்தமான காட்சிகளை படமாக்க இயக்குநர் ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து ரஜினிகாந்த் லால் சலாம் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

அதனைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு ரஜினியின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலாகி வருகிறது.

 Lal Salaam: Rajinikanths Moideen Bhai poster released in Lal Salaam

மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்ட ரஜினி, அடுத்து லால் சலாம் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் கேரக்டரில் நடிக்கின்றனர். லால் சலாம் படத்திற்கு இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதிகளில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் காட்சிகள் மும்பையில் படமாக்கப்படுகின்றன. இதற்காக விமானத்தில் மும்பை சென்ற ரஜினியின் புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்தன. மேலும், ரஜினியின் கேரக்டர் பெயர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று (மே 8) நள்ளிரவு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முதல் தோற்றம் படு மிரட்டலாக வெளியாகியுள்ளது.

மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள லால் சலாம் போஸ்டரில், ரஜினி டான் லுக்கில் செம்ம மாஸ்ஸாக மிரட்டுகிறார். "மும்பையில் இருந்து திரும்பிய மொய்தீன் பாய் எனவும், சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக" என இஸ்லாமியர்கள் வணக்கம் தெரிவிக்கும் வாசகமும் இந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. சிவப்பு நிற தொப்பி, லேசான தாடி, கூலர்ஸ் என மாஸ் லுக்கில் ராஜநடை போட்டு வருகிறார் ரஜினி.

 Lal Salaam: Rajinikanths Moideen Bhai poster released in Lal Salaam

பாட்ஷா படத்திற்குப் பிறகு ரஜினி முஸ்லிம் கேரக்டரில் நடிப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் லால் சலாம் படத்திலும் ரஜினி டான் கேரக்டரில் தான் நடிக்கிறார் என்பது போஸ்டரிலேயே உறுதியாகியுள்ளது. இதனையடுத்து லால் சலாம் படத்தின் ரஜினியின் மொய்தீன் பாய் போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும், மொய்தீன் பாய் போஸ்டர் வெளியானது முதல் டிவிட்டரிலும் ட்ரெண்டாகியுள்ளது. இந்நிலையில், ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லால் சலாம் படத்தில் ரஜினியின் காட்சிகள் மொத்தமே 20 முதல் 30 நிமிடங்கள் வரை தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், ரஜினி திரையில் இருக்கும் வரை அது ரசிகர்களுக்கு மாஸ் எனர்ஜி கொடுக்கும் என கூறப்படுகிறது. லால் சலாம் படத்தைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170-ல் நடிக்கவுள்ளார் ரஜினி. இந்தப் படத்திலும் ரஜினி முஸ்லிம் கேரக்டரில் தான் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X