Lal Salaam: நாளை லால் சலாம் ஆடியோ லான்ச்... குட்டி ஸ்டோரியுடன் ஸ்பெஷல் என்ட்ரியாகும் ரஜினி!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரஜினியின் குட்டி ஸ்டோரிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
லால் சலாம் ஆடியோ லான்ச்: ஜெயிலரை தொடர்ந்து ரஜினியின் லால் சலாம் திரைப்படம் வெளியாகவுள்ளது. பொங்கலுக்கு வெளியாகவிருந்த லால் சலாம் கடைசி நேரத்தில் பின் வாங்கியது. இதனையடுத்து பிப்ரவரி 9ம் தேதி லால் சலாம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி மொய்தீன் பாய் என்ற மும்பை டான் கேரக்டரில் கேமியோவாக மட்டுமே நடித்துள்ளார். ஆனாலும் ரஜினியின் கேரக்டர் செம்ம மாஸ்ஸாக இருக்கும் எனவும், அவர் வரும் காட்சிகளில் தெறிமாஸ் சம்பவங்கள் கன்ஃபார்ம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாம். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியும் குட்டி ஸ்டோரியுடன் என்ட்ரி கொடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில், கழுகு - காகம் கதை என ரஜினியின் பேச்சு வைரலாகின.
அதேபோல், லால் சலாம் இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினியின் குட்டி ஸ்டோரி தான் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தான் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு சென்று வந்தார் ரஜினி. அப்போதே அவரிடம் ராமர் கோயில் அரசியலா இல்லை ஆன்மீகமா என கேட்கப்பட்டதற்கு, அதில் அரசியல் கிடையாது என பேட்டிக் கொடுத்திருந்தார்.
ஆனால், லால் சலாம் விளையாட்டை பின்னணியாக வைத்து நடக்கும் மத அரசியலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. அதனால் இந்த இரண்டுக்கும் இருக்கும் முரண்களை வைத்து ரஜினி குட்டி ஸ்டோரி சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தலைவர் 171 ஷூட்டிங், தலைவர் 172 இயக்குநர் யார் போன்ற அப்டேட்களும் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











