Lal Salaam: லால் சலாம் ரிலீஸில் திடீர் சிக்கல்.. கடைசி நேரத்தில் என்னாச்சு..? ரசிகர்கள் குழப்பம்!

சென்னை: லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சொன்னபடி வெளியாகுமா லால் சலாம்?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. லைகா தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். ஆனாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ளதால், லால் சலாம் மீதான எதிர்பார்ப்பு எகிறிப் போயுள்ளது.

 Lal Salaam: Rajinikanths Lal Salaam is being held back from its Pongal release

ஜெயிலர் மூலம் வெறித்தனமான கம்பேக் கொடுத்த ரஜினி, லால் சலாம் படத்தில் மும்பை டான் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். ஏற்கனவே லால் சலாம் படத்தில் இருந்து மொய்தீன் பாய் போஸ்டர், க்ளிம்ப்ஸ் வீடியோ போன்றவை வெளியாகி மாஸ் காட்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை லால் சலாம் முதல் பாடலும் வெளியாகவுள்ளது. ஆனால், லால் சலாம் பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

லால் சலாம் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனாலும் இப்படத்தின் பேட்ச்வொர்க் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை என்றும், அதனால் பொங்கல் ரிலீஸில் இருந்து லால் சலாம் பின்வாங்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இன்று மாலை லால் சலாம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதால், அதனுடன் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அப்படி ரிலீஸ் தேதியில் மாற்றம் இருந்தால், ஜனவரி 26ம் தேதி லால் சலாம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள லால் சலாம், மத அரசியலை பேசும் எனத் தெரிகிறது. ஏஆர் ரஹ்மான் இசையில் இன்று மாலை வெளியாகும் 'தேர் திருவிழா' பாடல், ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் ரேஸில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் இரண்டும் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X