Lal Salaam: கேப்டன் மில்லர் வந்தாலும் லால் சலாம் பொங்கல் ரிலீஸ் தான்... கன்ஃபார்ம் செய்த படக்குழு!

சென்னை: சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம்.

ஐஸ்வர்யா ரஜிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், லால் சலாம் படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் பொங்கல் ரிலீஸையும் கன்ஃபார்ம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 Lal Salaam: Rajinikanths Lal Salaam is confirmed for Pongal release

லால் சலாம் பொங்கல் ரிலீஸ் கன்ஃபார்ம்
ஜெயிலர் திரைப்படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்த சூப்பர் ஸ்டார், அடுத்து தலைவர் 170ல் நடித்து வருகிறார். இதனிடையே தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ள இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மாஸ் காட்டவுள்ளாராம்.

மொய்தீன் பாய் என்ற கேங்ஸ்டராக ரஜினி நடித்துள்ளது கிட்டத்தட்ட கன்ஃபார்ம் ஆகியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், லால் சலாம் டீசர் தீபாவளி ஸ்பெஷலாக நாளை வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ், ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், லால் சலாம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை லைகா, சோனி நிறுவனங்கள் அபிஸியலாக அறிவித்துள்ளன. ஏஆர் ரஹ்மான் இசை என்பதால் பல கோடி ரூபாய்க்கு லால் சலாம் ஆடியோ ரைட்ஸ் விலை போயுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே லால் சலாம் பொங்கல் ரிலீஸில் இருந்து விலகுவதாக சொல்லப்பட்டது.

அதாவது லால் சலாம் படத்தின் சில காட்சிகள் ஹார்ட் டிஸ்க்கில் இருந்து டெலிட் ஆகிவிட்டதாகவும், அதனால் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இன்னும் முடியவில்லை எனவும் சொல்லப்பட்டது. அதேபோல், ஏஆர் ரஹ்மான் இன்னும் 3 பாடல்களுக்கு இசையமைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. இன்னொருபக்கம் தனுஷின் கேப்டன் மில்லர் பொங்கல் ரிலீஸுக்கு மாறிவிட்டதால், லால் சலாம் பொங்கலுக்கு வெளியாகாது என சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது வெளியான லால் சலாம் ஆடியோ ரைட்ஸ் போஸ்டரில், படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு உறுதி செய்துள்ளது. இதனால், லால் சலாம், கேப்டன் மில்லர், அயலான் படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கவுள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X