Lal Salaam: பொங்கல் ரேஸில் இருந்து அவுட் ஆன லால் சலாம்... புது ரிலீஸ் தேதியிலும் இவ்ளோ சிக்கலா..?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், இப்போது வரை படக்குழு தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் லால் சலாம் ரிலீஸில் சிக்கல்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லால் சலாம் ரிலீஸில் தொடரும் சிக்கல்
ஜெயிலரை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே நடித்துள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீட் ரோலில் நடித்துள்ளனர், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். லால் சலாம் படத்தில் ரஜினி மும்பை டான் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாட்ஷா படத்துக்குப் பின்னர், அதே மும்பை ஜானர் கேங்ஸ்டராக ரஜினி முஸ்லிம் கேரக்டரில் நடித்துள்ளார். இதனால் லால் சலாம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து மத அரசியலை பேசியுள்ளது லால் சலாம். இதனை ரஜினியின் பிறந்தநாளில் வெளியான லால் சலாம் டீசரில் பார்க்க முடிந்தது. இந்தப் படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்களுடன் ரஜினியின் லால் சலாம் வெளியாகும் என என எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து அயலான், கேப்டன் மில்லர் படங்களின் ட்ரெய்லர்கள் அடுத்தடுத்து வெளியாகின. ஆனால், லால் சலாம் படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த மாதம் தான் லால் சலாம் படத்தின் பேட்ச் ஒர்க் பணிகள் அவசரமாக நடைபெற்றன. அப்போதே லால் சலாம் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என சொல்லப்பட்டது.
அதேநேரம் லால் சலாம் ஸ்பெஷல் ஷோ பார்த்த ரஜினிகாந்த், படம் நன்றாக வந்துள்ளதால் ஜனவரி 26ம் தேதி சிங்கிளாக களமிறக்கலாம் என மகள் ஐஸ்வர்யாவிடம் கூறியிருந்தாராம். ஆனாலும் அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதனால் மிக முக்கியமான 4 சின்ன பட்ஜெட் படங்கள் ஜனவரி 25ம் தேதி ரிலீஸாகும் என அறிவித்துவிட்டன. அதன்படி, ஜிவி பிரகாஷின் ரெபெல், ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன், அசோக் செல்வன் நடிப்பில் ப்ளூ ஸ்டார், டிமாண்டி காலனி 2ம் பாகம் ஆகியவை ஜனவரி 25ம் தேதி வெளியாகின்றன.
இதனால், லால் சலாம் ஜனவரி இறுதியில் வெளியாவதும் சந்தேகம் தான் என சொல்லப்படுகிறது. பொங்கல் ரேஸில் இருந்து விலகியதைத் தொடர்ந்து தற்போது ஜனவரி மாதமும் லால் சலாம் ரிலீஸில் சிக்கல் உருவாகியுள்ளது. இப்படியே போனால் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தான் லால் சலாம் ரிலீஸாகக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











