Lal Salaam: ரஜினியோட கேமியோ ரோல் ஸ்பெஷல்... லால் சலாம் படத்தில் பாட்ஷா டச்... இனிதான் சம்பவமே!
சென்னை: ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம் இரண்டு வாரங்களில் 540 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ரஜினியின் லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினியின் கேமியோ ரோல் குறித்த அப்டேட் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

லால் சலாம் மொய்தீன் பாய் சம்பவம்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. ஆக்ஷன் ஜானரில் பக்கா கமர்சியல் படமாக வெளியான ஜெயிலர், இதுவரை 540 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் வாரம் முடிவில் 375 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. ஆனால், இரண்டாவது வாரத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
அதேநேரம் முதல் வாரத்தை விடவும் இரண்டாவது வாரம் ஜெயிலர் வசூல் ரொம்பவே குறைவு எனவும் சொல்லப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி வாங்கியதால் ஜெயிலர் இரண்டாவது வாரம் வசூல் குறைந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் ரஜினிக்கு ஜெயிலர் படம் கம்பேக்காகவே அமைந்துள்ளது.
இதனால், அவரது லால் சலாம் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார், ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து ஸ்போர்ட்ஸ் ஜானர் படமாக உருவாகியுள்ள லால் சலாம் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதால் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் ஹீரோவாக நடித்துள்ளனர், சூப்பர் ஸ்டார் ரஜினியோ கேமியோ கேரக்டரில் மட்டுமே தலை காட்டியுள்ளாராம். முக்கியமாக 'மொய்தீன் பாய்' என்ற டான் கேரக்டரில் ரஜினி நடித்துள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. மேலும், ரஜினியின் செம்ம மாஸ் போஸ்டர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனாலும் அதனை கடந்து வேறு எந்த அப்டேட்டும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினியின் கேரக்டர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ரொம்பவே பவர் ஃபுல்லான ரஜினியின் கேரக்டர் இடைவேளைக்குப் பின்னர் வரும் என தெரியவந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் சிறிது நேரம் மட்டுமே இடம்பெறும் அவரது காட்சிகளில் ஆக்ஷன் காட்சிகள் வெறித்தனமாக இருக்குமாம். பாட்ஷா படத்தில் ரஜினியின் ப்ளாஷ்பேக் சீன்ஸ் எப்படி இருக்குமோ, அதே வைப் லால் சலாம் படத்தில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











