Lal Salaam: சென்சாரில் தப்பித்த ரஜினியின் லால் சலாம்... வெளியானது ரன்னிங் டைம் அப்டேட்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வரும் 9ம் தேதி வெளியாகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதனைத் தொடர்ந்து லால் சலாம் சென்சார் அப்டேட்டுடன் ரன்னிங் டைம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லால் சலாம் சென்சார் அப்டேட்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோலில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளுக்காக கேமியோ ரோலில் மொய்தீன் பாய் என்ற கேங்ஸ்டராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லால் சலாம் வரும் 9ம் தேதி ரிலீஸாகவுள்ளதை அடுத்து, இந்தப் படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து மத அரசியல் பேசும் படமாக லால் சலாம் உருவாகியுள்ளதை, ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது. ரஜினியின் கேமியோ ரோல் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், லால் சலாம் படத்தின் சென்சார் குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் யூ/ஏ சான்று கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இருந்திருந்தால் ஏ சர்டிபிகேட் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், லால் சலாம் ரன்னிங் டைம் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி லால் சலாம் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என தெரியவந்துள்ளது. இதனால் லால் சலாம் கண்டிப்பாக போர் அடிக்காது என ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். பொதுவாக இப்போது வெளியாகும் படங்கள் பெரும்பாலும் 3 மணி நேரம் வரை ஓடுகின்றன. இதனால் லால் சலாம் ரன்னிங் டைம் குறித்து அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
முன்னதாக லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி குறித்து ஐஸ்வர்யா பேசியது வைரலானது. இது லால் சலாம் ப்ரோமோஷனுக்காகவோ அல்லது படத்தின் பப்ளிசிட்டிக்காக பேசவில்லை என ஐஸ்வர்யா விளக்கம் கொடுத்திருந்தார். இருப்பினும் லால் சலாம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











