Lal Salaam: லால் சலாம் தியேட்டர் ரைட்ஸ்... அதிரடியாக வெளியான அப்டேட்... பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கன்ஃபார்ம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், 2024 பொங்கலுக்கு வெளியாகும் என லைகா அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து லால் சலாம் படத்தில் இருந்து முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

 Lal Salaam: Red Giant Movies has acquired the Tamil Nadu theatrical rights of Lal Salaam

லால் சலாம் தியேட்டர் ரைட்ஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. ஜெயிலர் வெளியாகும் முன்பே லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இரண்டு படங்களில் கமிட்டாகியிருந்தார் ரஜினிகாந்த்.

அதன்படி, முதலில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்து முடித்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீட் ரோலில் நடித்துள்ள இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே என்ட்ரி கொடுக்கவுள்ளார். மும்பை மொய்தீன் பாய் என்ற ரஜினியின் கேரக்டர் செம்ம மாஸ்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் மொய்தீன் பாய் போஸ்டரும் வெளியாகியிருந்தது.

கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து ஸ்போர்ட்ஸ் ஜானர் படமாக உருவாகியுள்ளது லால் சலாம். இந்தப் படம் 2023 டிசம்பரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிசம்பர் 15ம் தேதி தனுஷின் கேப்டன் மில்லர் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், லால் சலாம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. சிவகார்த்திகேயனின் அயலான், சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 ஆகிய படங்களுடன் மோதுகிறது லால் சலாம்.

இந்நிலையில், இந்தப் படத்தின் முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, லால் சலாம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரைட்ஸை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளதாம். இதனை லைகா நிறுவனம் தனது டிவிட்டரில் அபிஸியலாக அறிவித்துள்ளது. இதனால் லால் சலாம் படத்தின் ப்ரொமோஷன் தரமாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 Lal Salaam: Red Giant Movies has acquired the Tamil Nadu theatrical rights of Lal Salaam

சமீபத்தில் தான் லால் சலாம் படத்திற்கான டப்பிங் வேலைகளை முடித்துக்கொடுத்தார் ரஜினி. அதன் பின்னரே தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படப்பிடிப்பில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்றார். லால் சலாம் ரிலீஸ் தேதி, தியேட்டர் ரைட்ஸ் அப்டேட்கள் வெளியாகிவிட்டன. இதனையடுத்து விரைவில் லால் சலாம் ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X