Lal Salaam Release Date: லால் சலாம் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா... ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு இன்று டபுள் தமாக்கா என லைகா நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி முதலில் தலைவர் 170 அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

Lal Salaam Release Date: Rajinikanths Lal Salaam will be released in 2024 Pongal

அதனைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தில் இருந்து ஸ்பெஷலான அப்டேட்டை லைகா வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பொங்கலுக்கு வெளியாகும் லால் சலாம்: அண்ணாத்த வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார். அண்ணாத்த படத்தில் விட்டதையும் சேர்த்து ஜெயிலரில் மொத்தமாக பிடித்துவிட்டார் ரஜினி. இதனால், சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகவுள்ள லால் சலாம் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது.

கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் ஆக்‌ஷன் ஜானர் படமாக உருவாகியுள்ளது லால் சலாம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், அவரது போர்ஷன் முழுவது தெறி மாஸ்ஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீட் ரோலில் நடித்துள்ளனர், ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Lal Salaam Release Date: Rajinikanths Lal Salaam will be released in 2024 Pongal

லால் சலாம் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போது லால் சலாம் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்தாண்டு பொங்கலுக்கு லால் சலாம் ரிலீஸாகும் என லைகா நிறுவனம் தனது டிவிட்டரில் அபிஸியலாக அறிவித்துள்ளது.

முன்னதாக தலைவர் 170 படத்தின் அப்டேட்டை வெளியிட்டு வந்த லைகா, ரசிகர்களை ஏமாற்றியிருந்தது. அதற்கும் சேர்த்து தற்போது லால் சலாம் ரிலீஸ் தேதியை அறிவித்து தரமான ட்ரீட் கொடுத்துள்ளது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் செம்ம மாஸ்ஸான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. ரஜினியின் அருகே விஷ்ணு விஷாலின் ரெட்ரோ லுக் போட்டோவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் அயலான் 2024 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. தற்போது பொங்கல் ரேஸில் அயலானுடன் தலைவரின் லால் சலாமும் ரிலீஸாகவுள்ளது. ஏற்கனவே ஜெயிலர் படத்துக்காக ஆகஸ்ட் 11ல் வெளியாகவிருந்த தனது மாவீரனை, ஜூலை மாதமே ரிலீஸ் செய்தார் சிவகார்த்திகேயன். இப்போது அயலானுக்குப் போட்டியாக ரஜினியின் லால் சலாமும் பொங்கல் ரேஸில் களமிறங்குவது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X