LalSalaam Review: "இது படமே இல்ல அதுக்கும் மேல.. தலைவரோட அடுத்த பாட்ஷா” லால் சலாம் பப்ளிக் விமர்சனம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் இன்று வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யார் ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா தயாரிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இந்நிலையில் லால் சலாம் படத்தின் பப்ளிக் விமர்சனம் வெளியாகி வைரலாகி வருகிறது.

லால் சலாம் பப்ளிக் விமர்சனம்
இன்று வெளியான லால் சலாம் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். பாட்ஷா ஸ்டைலில் மும்பை கேங்ஸ்டராக ரஜினி நடித்துள்ளதால் லால் சலாம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதன்படி, தற்போது வெளியான லால் சலாம் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

 Lal Salaam Review: Rajinikanths Lal Salaam public review on trending

லால் சலாம் திரைப்படம் சூப்பரா இருக்கு... தலைவர் சூப்பரா நடிச்சிருக்கார் என ரசிகர் ஒருவர் உற்சாகமாக கூறியுள்ளார். மேலும் ரஜினியின் ஸ்டைல், ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம் எல்லாம் பக்காவா வந்துருக்கு என தெரிவித்துள்ளார். இன்னொரு ரசிகரோ "இது படமே இல்ல அதுக்கும் மேல.." என பயங்கரமாக ஹைப் கொடுத்துள்ளார். அதேபோல், லால் சலாம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர், "ஜெயிச்சுட்டோம்ன்னே ஜெயிச்சுட்டோம்ன்னே.. பல வருசத்துக்கு அப்புறம் தலைவரோட கண்ணாடி பேசிருக்கு.." என ரொம்பவே ஓவர் டோஸ் விமர்சனம் கொடுத்துள்ளார்.

 Lal Salaam Review: Rajinikanths Lal Salaam public review on trending

அதேபோல், "சமூகத்துக்கு தேவையான கருத்தை ரஜினி பேசியிருப்பதாகவும், சமூகத்தில் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் எனவும் தலைவர் சொல்லிருக்கார். ரஜினி நடந்து வர்ற சீன்லயே வேற லெவலில் இருக்கு" என ரசிகர்கள் உற்சாகமாக கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினியின் இன்ட்ரோ சீன் செம்ம மாஸ் எனவும், அந்த 5 நிமிடங்கள் தாறுமாறு என்றும் ரசிகர்கள் சிலர் குரூப்பாக குரல் கொடுத்துள்ளனர்.

லால் சலாம் அடுத்த பாட்ஷா எனவும், கண்டிப்பாக தியேட்டரில் பார்க்கலாம் என்றும் ரசிகர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். இன்னொரு ரசிகரோ "ரஜினி 72 வயசுல இளம் ஹீரோ மாதிரி செம்ம மாஸ்ஸாக நடிக்கிறார் எனவும், ரஜினி மட்டும் தான் ஆல் டைம் சூப்பர் ஸ்டார்" என்றும் கூறியுள்ளார். லால் சலாம் படத்தில் ரஜினி மட்டும் தான் மாஸ் காட்டியுள்ளதாகவும் அவருக்காகவே படம் பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் கும்பலாக செலப்ரேஷன் செய்துள்ளனர்.

 Lal Salaam Review: Rajinikanths Lal Salaam public review on trending

படத்தின் திரைக்கதை நன்றாக இருப்பதாகவும் கொஞ்சம் கூட போர் அடிக்காமல் இருக்கிறது எனவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். லால் சலாம் படத்தை தலைவருக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், மாஸ் என்டர்டெயினர் மூவி எனவும் கூறி வருகின்றனர். ரசிகை ஒருவர் லால் சலாம் எதிர்பார்த்து சென்றதை விட வேற லெவலில் தரமாக இருக்கிறது என பாராட்டியுள்ளார். மேலும் சிலர் ரஜினிக்காக ஒருமுறை மட்டும் பார்க்கலாம், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்திருக்கலாம் என விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X