லால் சலாம் படப்பிடிப்பு ஆரம்பம்.. அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கேமியோ ரோலில் நடிக்க உள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

மார்ச் 2வது வாரம் ஏகே 62 படத்தின் அப்டேட் வரும் என அஜித் ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருந்த நிலையில், மீண்டும் அவர்களுக்கு ஒரு ஏமாற்றம் தரும் அப்டேட்டையே லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதே சமயம் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் இருந்து வெளியேறியதாக வதந்திகள் வெளியான நிலையில், அதற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

லால் சலாம் படப்பிடிப்பு ஆரம்பம்

லால் சலாம் படப்பிடிப்பு ஆரம்பம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியாகி வெகு நாட்கள் ஆன நிலையில், இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என்கிற அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. லால் சலாம் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அப்பா ரஜினிகாந்த் உடன் திருப்பதி, மசூதிகளுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்று வந்த புகைப்படங்களும் வெளியாகின.

கெளரவ கேமியோ

கெளரவ கேமியோ

மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கெளரவ கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. ஆனாலும், இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமாகவே ப்ரோமோட் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

பல வருடங்களுக்கு பிறகு

பல வருடங்களுக்கு பிறகு

முன்னாள் கணவர் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். இரு படங்களும் கலவையான விமர்சனத்துடன் சுமாராகவே ஓடின. 3 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்த நிலையில், அந்த படத்தின் பாடல்கள் வேறலெவலில் ஹிட் அடித்தன. இந்நிலையில், பல வருடங்களுக்கு பிறகு லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி

வதந்திக்கு முற்றுப்புள்ளி

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் தான் லால் சலாம் படத்தில் கதாநாயகர்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் விஷ்ணு விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டது என்றும் விஷ்ணு விஷால் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் என வதந்திகள் பரவின. இந்நிலையில், இன்றைய போஸ்டரில் தெள்ளத் தெளிவாக விஷ்ணு விஷால் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன.

பற்றி எரியும் கிரிக்கெட் மைதானம்

பற்றி எரியும் கிரிக்கெட் மைதானம்

லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்திய படமாக உருவாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கிரிக்கெட் கோச்சாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள புதிய போஸ்டரில் கிரிக்கெட் மைதானத்தில் கலவரம் நடப்பது போலவும் கிரிக்கெட் மைதானமே பற்றி எரிவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அஜித் பட அறிவிப்பு இல்லை

அஜித் பட அறிவிப்பு இல்லை

லைகா நிறுவனத்திடம் புதிய அறிவிப்புகள் வெளியானதும் முதல் ஆளாக வந்து பார்த்து ஏமாந்து போவது என்னமோ அஜித் ரசிகர்கள் தான். லால் சலாம் படத்தின் அறிவிப்பை பார்த்ததும் அப்செட்டான ரசிகர்கள் வழக்கம் போல லைகா நிறுவனத்தை திட்டி கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X