Lal Salaam: கடைசி நேர பரபரப்பில் லால் சலாம் பேட்ச் ஒர்க்... என்ன தலைவரே இதெல்லாம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஆனால், இந்தப் படத்தின் பேட்ச்வொர்க் இன்னும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லால் சலாம் பேட்ச்வொர்க்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நெல்சன் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் ஜனவரி மாதத்துடன் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. இதனிடையே லால் சலாம் படத்தில் நடித்திருந்தார் ரஜினி. லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தை சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீட் ரோலில் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் லால் சலாம் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து மத அரசியலை பேசும் படமாக உருவாகியுள்ளது லால் சலாம். தீபாவளியை முன்னிட்டு லால் சலாம் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் லால் சலாம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், ரஜினி, கபில் தேவ் உள்ளிட்டோரும் டப்பிங் கொடுத்துவிட்டனர்.
ஆனாலும் கடந்த சில தினங்களாக லால் சலாம் படத்தின் ஷூட்டிங் மீண்டும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செஞ்சி பகுதியில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் ரஜினியும் கலந்துகொண்டதாக தெரிகிறது. அதேநேரம் இது முக்கியமான காட்சிகள் இல்லை என்றும், பேட்ச்வொர்க் ஷெட்யூல் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், கடைசி நேரத்தில் பேட்ச்வொர்க் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதனையறிந்த ரசிகர்கள் லால் சலாம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











