Lal Salaam: பொங்கல் ரிலீசை மீண்டும் உறுதி செய்த லால் சலாம் டீம்.. இசை வெளியீடு எப்பன்னு பாக்கலாங்களா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளது மிகப்பெரிய கவனத்தை படத்திற்கு கொடுத்துள்ளது.

கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
லால் சலாம் படம்: நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லால் சலாம் படம் பொங்கல் ரிலீசுக்கு தயாரிகி வருகிறது. கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்தப் படத்தை ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா இயக்கத்தில் மூன்றாவது படமாக லால் சலாம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளத படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
பொங்கல் 2024 ரிலீஸ்: படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, திருவண்ணாமலை, பாண்டிச்கேரி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முன்னதாக படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, மும்பையில் நடத்தப்பட்ட சூட்டிங் காட்சிகள் அழிந்துப் போனதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த செய்திகளை எல்லாம் கடந்து லால் சலாம் ரிலீசுக்கு ரெடி. இதுகுறித்து படக்குழு புதிய போஸ்டரையும் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

ரஜினியின் தலைவர் 170 படம்: இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். முன்னதாக திருவண்ணாமலை போன்ற இடங்களில் இவர் ரசிகர்களை சந்தித்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்தப் படத்தின் டப்பிங்கையும் ரஜினி முடித்துக் கொடுத்துவிட்டு தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் தலைவர் 170 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். சென்னையில் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நடந்து வருகிறது.
லால் சலாம் படத்தின் இசை வெளியீடு: இந்நிலையில் லால் சலாம் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டிற்கும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் டிசம்பர் 20ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இசை வெளியீட்டில் படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இணைவாரா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அவர் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடிவரும் நிலையில், கிறிஸ்துமசையொட்டி நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பங்கேற்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டின்போது நடிகர் ரஜினிகாந்த் சொன்ன காக்கா மற்றும் பருந்து கதை படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. படமும் சூப்பர் ஹிட்டானது. அந்த வகையில் தன்னுடைய மகளின் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் எந்த மாதிரியான சர்ச்சையை ஏற்படுத்துவார் என்பது குறித்தும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்த்திருக்கின்றனர். கேமியோ ரோலாக இருந்தாலும் இந்தப் படத்தில் நடிக்க ரஜினி 40 கோடி ரூபாய் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











