Vishnu vishal: விஷ்ணு விஷால் பிறந்தநாள் கொண்டாட்டம்.. லால் சலாம் பர்ஸ்ட் லுக் இதோ!

சென்னை: ரஜினியின் மூத்த மகளும் பிரபல இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ளது லால் சலாம் படம்.

3, வை ராஜா படங்களை தொடர்ந்து இந்தப் படத்தை எடுத்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. படத்தில் ரஜினியும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்தப்படத்தில் லீட் கேரக்டர்களில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Lal Salaam team Wishes Actor Vishnu Vishal on his birthday and released Poster of the movie

நடிகர் விஷ்ணு விஷால் பிறந்தநாளையொட்டி லால் சலாம் போஸ்டர் வெளியீடு: நடிகர் ரஜினியின் மூத்த மகளும், பிரபல இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். தனுஷுடனான பிரிவு அறிவிப்பிற்கு பிறகு இவர் தனது கேரியர், பிட்னஸ், குழந்தைகள், ஆன்மீகம் என அடுத்தடுத்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக முஷாபிர் என்ற இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டிருந்த ஐஸ்வர்யா ரஜினி, தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்தப் படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் சூட்டிங் மும்பை, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏஆர் ரஹ்மான். படத்தின் கேமியோ ரோலில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இவரது போஸ்டர்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் ஆகியவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

Lal Salaam team Wishes Actor Vishnu Vishal on his birthday and released Poster of the movie

மும்பை, திருவண்ணாமலை போன்ற இடங்களில் ரஜினியின் போர்ஷன்கள் எடுக்கப்பட்டன. குறிப்பாக திருவண்ணாமலையில் ஒரு பண்ணை வீட்டில் நடைபெற்ற இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது ரசிகர்கள் காத்திருந்து ரஜினியை சந்தித்தனர். தன்னுடைய இருப்பிடத்திற்கு செல்லும்வழியில் காரில் இருந்தபடியே ரஜினி தன்னுடைய ரசிகர்களுக்கு கையசைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது சூட்டிங் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஐஸ்வர்யா ரஜினி, தன்னுடைய அப்பா உண்மையில் மேஜிக் என்றும் அவருடன் இணைந்து படம் செய்தது அதிசயமாக இருந்ததாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நிறைவு மற்றும் விஷ்ணு விஷால் பிறந்தநாளை சேர்த்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்களையும் ஐஸ்வர்யா ரஜினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Lal Salaam team Wishes Actor Vishnu Vishal on his birthday and released Poster of the movie

இந்நிலையில் இன்றைய தினம் நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாளையொட்டி படத்தில் அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரில் கிரிக்கெட் காஸ்ட்யூமுடன் விஷ்ணு விஷால் காணப்படுகிறார். மேலும் தங்களின் திருநாவுக்கரசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டரையும் ஐஸ்வர்யா ரஜினி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் படத்தில் விஷ்ணு விஷாலின் கேரக்டர் பெயர் தற்போது வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X