Lal Salaam Teaser: “விளையாட்டுல மதமா..?” மொய்தீன் பாய் மாஸ் என்ட்ரி... வெளியானது லால் சலாம் டீசர்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் டீசர், தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளனர்.

 Lal Salaam Teaser: Rajinikanths Lal Salaam Teaser Released now

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெளியான லால் சலாம் டீசர், ரஜினி ரசிகர்களுக்கு செம்ம கூஸ்பம்ஸாக அமைந்துள்ளது.

வெளியானது லால் சலாம் டீசர்: பல வருடங்களுக்குப் பின்னர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார். லைகா தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோலில் நடித்துள்ளனர்.

 Lal Salaam Teaser: Rajinikanths Lal Salaam Teaser Released now

இந்நிலையில், தீபாவளி ஸ்பெஷலாக லால் சலாம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 1.39 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த டீசர், சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் வைப் கொடுத்துள்ளது. கிரிக்கெட்டை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள லால் சலாம், விளையாட்டில் மத அரசியல் இருப்பது குறித்து பேசியுள்ளதை இந்த டீசர் உறுதி செய்துள்ளது.

இரண்டு ஊர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதை போல பில்டப் செய்யப்படுகிறது. இதனால், இந்து - முஸ்லிம் இடையே கலவரம் வெடிக்க, அதற்கு பஞ்சாயத்து செய்ய களமிறங்குகிறார் கேங்ஸ்டர் மொய்தீன் பாய். இப்படித்தான் லால் சலாம் டீசரில் சூப்பர் ஸ்டாரின் கேரக்டர் அறிமுகமாகிறது.

 Lal Salaam Teaser: Rajinikanths Lal Salaam Teaser Released now

இதனால் இந்தப் படம் விளையாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்வதற்கு எதிரான கருத்தியலோடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லால் சலாம் டீசரில் ரஜினியின் செம்ம மாஸ் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. அதனையடுத்து ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். வரும் பொங்கலுக்கு வெளியாகும் லால் சலாம், தலைவரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

 Lal Salaam Teaser: Rajinikanths Lal Salaam Teaser Released now

இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பான் இந்தியா லெவலில் ரிலீஸாகிறது. லால் சலாம் டீசரைத் தொடர்ந்து விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேபோல், லால் சலாம் ஆடியோ லான்ச் ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்யப்படவுள்ளதாம். லால் சலாம், தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X