Lal Salaam vs Captain Miller Box Office: தனுஷ் பட வசூலில் பாதி கூட ரஜினிகாந்த் படத்துக்கு வரலயே?
சென்னை: நல்லவேளை லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு போட்டியாக வெளியாகி இருந்தால் இப்போது வந்துள்ள முதல் நாள் வசூல் கூட வந்திருக்காது என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் அதிர்ச்சியை கிளப்பி உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோவை தாண்டி குணசித்ர நடிகராகவே நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்கின்றனர்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் மட்டுமே இருந்திருந்தாலே இந்த அளவுக்கு வசூல் வந்திருக்கும் என்றும் சூப்பர் ஸ்டார் இமேஜ் இந்த படத்துக்கு கூடுதல் வியாபாரத்தை ஈட்டிக் கொடுக்கும் என எதிர்பார்த்த தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிய இடியே தலையில் இறங்கி இருக்கும் என்கின்றனர்.

குவியும் பாராட்டுக்கள்: தனுஷை வைத்து '3’, கெளதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த முறை சமூகத்திற்கு தேவையான மதநல்லிணக்க விஷயத்தை கையில் எடுத்து தனது அப்பாவையே மொய்தீன் பாயாக நடிக்க வைத்து அவர் மீது யாரும் தேவையற்ற விமர்சனங்களை பண்ணக் கூடாது என ஒரு படம் மூலம் 'For My Dad' என இந்த லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி பல விமர்சகர்களும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட கதை மற்றும் ரஜினிகாந்த் வரும் போர்ஷன்கள் எல்லாமே தீயாக இருக்கு என பாராட்டி வருகின்றனர்.
தியேட்டருக்கு வந்த லதா ரஜினிகாந்த்: லால் சலாம் திரைப்படம் நேற்று ரோகிணி தியேட்டரில் சிறப்பு காட்சியாக காலை 9 மணிக்கு வெளியான நிலையில், அந்த படத்தை பார்க்க விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்று லதா ரஜினிகாந்த் என பிரபலங்கள் வந்திருந்தனர். தனது கணவர் நடித்து மகள் இயக்கி உள்ள படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என ரொம்ப நாள் கழித்து தியேட்டருக்கு வந்து லதா ரஜினிகாந்த் பார்த்திருந்தார்.
முதல் நாள் வசூல்: லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தின் ஒட்டுமொத்த புரமோஷனும் சூப்பர் ஸ்டாரை வைத்தே நடத்தப்பட்டது. படத்தில் அவருடைய டைட்டில் கார்டும் போடப்பட்டுத்தான் படம் ஆரம்பித்தது. ஆனால், லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் ரஜினிகாந்த் பட வசூல் அளவுக்கு இல்லாமல் போனது பெரும் அதிர்ச்சியை விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் ஓனர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வெறும் 4.3 கோடி ரூபாய் மட்டுமே முதல் நாளில் லால் சலாம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேப்டன் மில்லர் அதிகம்: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாளிலேயே 9.35 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டும் 8 கோடி ரூபாய் வசூலை கேப்டன் மில்லர் அள்ளியிருந்தது குறிப்பிடத்தக்கது. தனுஷ் படத்துக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்துக்கும் போட்டி என்று வைத்தால் கூட தனுஷ் தான் வெற்றி பெற்று இருக்கிறார் என்கின்றனர்.
அயலான் முதல் நாள் வசூல்: கேப்டன் மில்லர் படத்துடன் போட்டியாக வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் முதல் நாள் 7 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களுடன் லால் சலாம் மோதியிருந்தால் இந்த வசூல் கூட வந்திருக்குமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர். வீக்கெண்டில் ரஜினிகாந்த் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்தால் தான் பாக்ஸ் ஆபிஸ் அதிகரிக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











