Lal Salaam: "விஜய் பெயரை தயங்கி தயங்கி சொன்ன விக்ராந்த்..” உஷாரான ரஜினி... இதுதான் காரணமா..?

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் பிப்.9ம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி ஓபனாக பேச என்ன காரணம் என தெரியவந்துள்ளது.

விஜய் பற்றி பேச இதுதான் காரணமா..?
ஜெயிலர் மூலம் சூப்பரான கம்பேக் கொடுத்துள்ள ரஜினிகாந்த், அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து மத அரசியல் குறித்து லால் சலாம் உருவாகியுள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ள இந்தப் படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்ற மும்பை டானாக நடித்துள்ளார்.

 Lal Salaam: Why Rajini talked about Vijay at the Lal Salaam audio launch..?

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் குட்டி ஸ்டோரி கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். முக்கியமாக லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய், ரத்னகுமார் ஆகியோர் பேசியதற்கு பதிலடி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தலைவரோ அதற்கு நேர் எதிராக விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன், அவருடன் எனக்கு என்ன போட்டி, அது எனக்கு மரியாதை கிடையாது என ஒரே போடாக போட்டுவிட்டார்.

மேலும், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதை சொன்னது விஜய்யை மனதில் வைத்து கிடையாது என்றும் விளக்கம் கொடுத்தார். எப்போதும் ஃபையரிங் மோடில் இருக்கும் ரஜினி திடீரென இப்படி மாறியதை ரசிகர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ரஜினியின் இந்த திடீர் மாற்றத்துக்குப் பின்னால் என்ன இருக்கும் என சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவருமே ஒன்றாக மேடை ஏறினர். அப்போது கிரிக்கெட் டீம் கோச்சாக உங்கள் சாய்ஸ் யார் என இருவரிடமும் கேட்கப்பட்டது. முதலில் பதில் சொன்ன விஷ்ணு விஷால், "அஜித் சார் தான் எனக்கு கோச்சாக வர வேண்டும்... அவர் தான் கொஞ்சம் டீசண்டாக திட்டுவார்.." என பதில் கூறினார். இதனையடுத்து விக்ராந்த் பதில் சொல்லும் முறை வந்தது.

அப்போது கொஞ்சம் தயக்கத்துடனே பேச ஆரம்பித்த விக்ராந்த், இந்த பதிலை இங்கு சொல்ல கொஞ்சம் யோசித்து தான் சொல்கிறேன்... எனக்கு கோச் என்றால் அது விஜய்ண்ணா தான் என்றார். ரஜினியின் லால் சலாம் இசை வெளியீட்டு மேடையில் அஜித், விஜய் இருவரது பெயர்கள் ஒலித்ததும் மொத்த அரங்கமும் ஆர்ப்பரித்தது. இதனை பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், விக்ராந்த் விஜய் பெயரை தயங்கி தயங்கி சொல்ல அந்த காக்கா, கழுகு கதை தான் காரணமாக இருக்குமோ என நினைத்திருப்பார்.

அதனால் தான் லால் சலாம் மேடையில் மனம் திறந்து பேசிவிட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இனி ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சண்டை போடாமல் இருந்தால் அதுவே போதும் எனவும் கமெண்ட்ஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இனி GOAT இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது எதிர்பார்க்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X