Lal Salaam First Single - லால் சலாமின் தேர் திருவிழா.. போடு தியேட்டரில் பெரும் கொண்டாட்டம் இருக்கு

சென்னை: Ther Thiruvizha (தேர் திருவிழா) ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லால் சலாம் படத்திலிருந்து தேர் திருவிழா பாடல் வெளியானது.

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்களுக்கு முன்பு திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா குறித்த பணிகளில் ஆர்வமாக கவனம் செலுத்திவருகிறார்.

Lal Salaams First Single Ther Thiruvizha Was Out Now

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

லால் சலாம் இயக்கும் ஐஸ்வர்யா: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக லால் சலாம் என்ற படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஷுட்டிங் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்தது. லால் சலாம் படத்தின் ஹைலைட்டாக ரஜினிகாந்த் இருக்கிறார்.

மொய்தீன் பாயாக ரஜினிகாந்த்: லால் சலாமில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிக்கிறார். மும்பையில் அவர் தாதாவாக இருப்பார் என்றும் விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் ஒரு பிரச்னையில் இருந்து அவர் காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் கபில்தேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

க்ளிம்ப்ஸ்: ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி படத்திலிருந்து அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. பக்கா ஆக்‌ஷன் காட்சிகள் அவருக்கு இருக்கின்றன. படத்தில் மொத்தம் 50 நிமிடங்கள்வரை அவர் வருவார் என ஏற்கனவே கூறப்பட்டிருக்கும் சூழலில் அந்த 50 நிமிடங்களும் மாஸாக இருக்கும் என்பதை க்ளிம்ப்ஸ் காட்சிகள் உணர்த்தின.

ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்த சூழலில் படத்தில் இடம்பெற்றிருக்கும் தேர் திருவிழா என்ற பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பாடலானது இன்று வெளியாகியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க விவேக் பாடலை எழுதியிருக்கிறார். சங்கர் மகாதாவேன், ரைஹானா, தீப்தி சுரேஷ், யோகி சேகர் பாடலை பாடியிருக்கின்றனர். பாடல் பக்கா கொண்டாட்ட பாடலாக அமைந்திருக்கிறது. கண்டிப்பாக இந்தப் பாடல் திரையரங்கில் ஒரு கொண்டாட்ட மனநிலையை கொடுக்கும் என கூறி ரசிகர்கள் அந்தப் பாடலை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கிவருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X