விஜய்யின் கடைசி படம் போட்டிப் போட்ட விநியோகஸ்தர்கள்.. பெரிய தொகைக்கு வாங்கியது இவர்தானா?

சென்னை: தளபதி 69 படத்தின் படப்பிடிப்பை விட அந்த படத்தின் வியாபாரம் படு ஸ்பீடாக நடைபெற்று வருகிறது. கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில், படத்தின் தமிழ்நாடு உரிமைக்கான போட்டி இப்பவே தொடங்கி விட்டது என்கின்றனர்.

படம் பாதி கூட ரெடியாகாத நிலையில், சுமார் 100 கோடிக்கு தமிழ்நாடு உரிமம் விற்கப்படப் போவதாகவும் பிரபல தயாரிப்பாளர் தான் இந்த போட்டியில் வென்றிருக்கிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

thalapathy 69 vijay bobby deol 69

எச். வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் கடைசி படம்: நடிகர் விஜய்க்கு அரசியல் மீது ஆசை வந்த நிலையில், இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் மக்கள் பணியை செய்யப் போகிறேன் என தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி மாநாட்டையும் மாஸாக நடத்தி முடித்துள்ளார். இந்த ஆண்டு விஜய் நடித்த கோட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 படம் அடுத்த ஆண்டு ஆயுத பூஜைக்கு வெளியாக காத்திருக்கிறது.

thalapathy 69 vijay bobby deol 69

சூடு பிடித்த பிசினஸ்: 2026ம் ஆண்டு தேர்தலை சந்தித்து சிஎம் ஆகிவிட வேண்டும் என்கிற முடிவுடன் இருக்கும் நடிகர் விஜய் அதற்கான வேலைகளை செய்ய தனக்கு குறைந்தது 6 மாதமாவது தேவை என்கிற முடிவில் தளபதி 69 படத்தை ஏப்ரல் மாதத்துக்குள் ஷூட்டிங் முடிக்க உத்தரவிட்டு இருப்பதாக கூறுகின்றனர். படத்தின் படப்பிடிப்பு வேகமாக ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், அதைவிட வேகமாக ப்ரீ ரிலீஸ் பிசினஸ் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

100 கோடிக்கு விற்பனை: தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை லலித் குமார் தான் வாங்கப் போகிறார் என்றும் 100 கோடி ரூபாய் வரை பிசினஸ் நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே விஜய்யின் கோட் திரைப்படம் தமிழ்நாட்டிலேயே 100 கோடி ஷேர் பெற்ற நிலையில், படத்தை வாங்கிய ராகுல் சந்தோஷத்தில் விஜய்யுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிலையில், விஜய்யின் கடைசி படம் 150 கோடி ரூபாய் வரை தமிழ்நாட்டில் ஷேர் அள்ளும் என எதிர்பார்த்து இந்த டீலிங் நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

1000 கோடி அடிக்குமா?: விஜய்யின் லியோ திரைப்படம் 1000 கோடி அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 600 கோடியுடன் வசூல் நின்று போனது. கோட் திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கும் என்கின்றனர். இந்நிலையில், தளபதி 69 திரைப்படமாவது தமிழ்நாட்டுக்கு 1000 கோடி ரூபாய் படமாக அமையுமா? என்கிற கேள்விகளும் கிளம்பியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X