நிலானிக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது, வீடியோ என்னிடம் இருக்கு: லலித்குமார் அண்ணன்
Recommended Video

சென்னை: நடிகை நிலானிக்கு குடிப்பழக்கம் உள்ளது என்றும், அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது என்றும் லலித் குமாரின் அண்ணன் ரகுகுமார் தெரிவித்துள்ளார்.
டிவி சீரியல் நடிகை நிலானி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தன் மீது புகார் அளித்ததை அடுத்து தீக்குளித்த உதவி இயக்குனர் காந்தி லலித் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காந்தியின் மரணத்திற்கு தான் காரணம் அல்ல என்று தெரிவித்த நிலானி நேற்று கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

நிலானி
என் தம்பி காந்தியின் மரணத்திற்கு நிலானி தான் காரணம். நிலானி போலீசில் பொய் புகார் அளித்ததால் மனமுடைந்த என் தம்பி தற்கொலை செய்து கொண்டார். என் தம்பியை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் நிலானி. தம்பியின் மரணத்திற்கு அவர் மட்டுமே காரணம் என்று லலித்குமாரின் அண்ணன் ரகு குமார் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்
நிலானிக்கு குடிப்பழக்கம் உள்ளது. மேலும் அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது. அது குறித்த ஆதாரங்களை நான் விரைவில் வெளியிடுவேன். அப்பொழுது நிலானி யார் என்று இந்த உலகத்திற்கு உண்மை தெரிய வரும். தற்போது அவர் என் தம்பி தான் கெட்டவன் என்பது போல தெரிவித்துள்ளார் என்கிறார் ரகு குமார்.

முயற்சி
ரகு குமார் நிலானி பற்றிய முக்கிய வீடியோ ஆதாரங்களை நேற்று வெளியிடுவதாக கூறியிருந்தார். அந்த வீடியோ வெளியாகி தன் பெயர் கெட்டுவிடுமோ என்ற பயத்தில் தான் நிலானி தற்கொலை செய்ய முயன்றதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். ரகு குமார் கூறும் அந்த வீடியோக்கள் வெளியே வந்தால் மேலும் பரபரப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாவம்
காந்தி லலித் குமார் விவகாரத்தால் நிலானி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சனையால் அவரின் 2 குழந்தைகள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நிலானி விஷம் குடித்து மயங்கியபோது அதை பார்த்து அலறிக் கொண்டு ஓடி வந்த குழந்தைகளை பார்த்து தான் அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


Click it and Unblock the Notifications











