அவன் மோசமானவன், பழகாதே: நிலானியை எச்சரித்த லலித் குமாரின் சகோதரிகள்
Recommended Video

சென்னை: காந்தி லலித்குமார் மோசமானவர், அவருடன் பழகாதே என்று அவரின் சகோதரிகள் தன்னை எச்சரித்ததாக நடிகை நிலானி தெரிவித்துள்ளார்.
நடிகை நிலானி தன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நடுத்தெருவில் தீக்குளித்த உதவி இயக்குனர் காந்தி லலித்குமார் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அவரின் மரணத்திற்கு தான் காரணம் இல்லை என்று தெரிவித்துள்ளார் நிலானி. இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,

பழக்கம்
3 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி லலித் குமார் எனக்கு அறிமுகமானார். கணவர் கைவிட்ட நிலையில் 2 குழந்தைகளுடன் வசித்து வரும் எனக்கு உதவியாக இருந்தார். குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவது போன்ற வேலைகளை அவராகவே செய்தார். நாட்கள் செல்ல செல்ல என்னை காதலிப்பதாக கூறினார்.

எச்சரிக்கை
அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் தான் வேறு வழியில்லாமல் அவரின் காதலை ஏற்றேன். உடனே திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்தோம். அப்போது தான் லலித் குமார் மோசமானவர், அவரிடம் எச்சரிக்கையாக இருக்கவும் என்று அவரின் சகோதரிகளே என்னை எச்சரித்தனர். சகோதரிகளே அப்படி கூறியதை அடுத்த லலித் குமாரிடம் இருந்து விலக முயன்றேன். ஆனால் முடியவில்லை.

மருத்துவமனை
ஒரு நாள் லலித் குமார் என்னை தாக்கினார். இதில் காயம் அடைந்த நான் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். லலித் என்னை தாக்கியது குறித்து போலீசில் புகார் அளித்தால் அவர் என் குழந்தைகளை ஏதாவது செய்துவிடுவாரோ என்று பயந்து அமைதியாக இருந்துவிட்டேன். தூத்துக்குடி சம்பவத்தின்போது நான் வீடியோ வெளியிட்டு கைதானபோது என்னை ஜாமீனில் எடுக்க அவர் தான் உதவி செய்தார்.

கொடுமை
லலித் என் குழந்தைகளை அடித்ததுடன் என்னையும் கொடுமைபடுத்தியுள்ளார். கட்டாயப்படுத்தி என்னை அவருடன் ஒரு நாள் முழுவதும் இருக்க வைத்தார். பேருந்தில் சென்றபோது என் காலில் மெட்டியை போட்டு வீடியோ எடுத்தார். 3 ஆண்டுகளாக கொடுமைபடுத்தி வந்த அவர் ஒரு நாள் என் கழுத்தில் தாலி கட்டினார். இதனால் கோபம் அடைந்த நான் அந்த தாலியை கழற்றி வீசிவிட்டேன்.

தலைமறைவு
லலித் குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. அவர் தான் என்னையும், என் குழந்தைகளையும் கொடுமைபடுத்தி வந்தார். என் குழந்தைகளுக்காக அவர் செய்த கொடுமைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டேன். அவர் இறந்துவிட்டதால் கைது பயத்தில் நான் தலைமறைவாகிவிட வில்லை என்று தெரிவித்துள்ளார் நிலானி.


Click it and Unblock the Notifications











