Don't Miss!
- Sports
அஸ்வின் ஆஸி. மண்டைக்குள்ள போய்ட்டாரு.. பங்கமாக கலாய்த்த வசீம் ஜாபர்.. பேட்ஸ்மேன்களுக்கு யோசனை
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
56 வயதில் 46 வயது நடிகையை மடக்கிய லலித் மோடி.. அவரே போட்ட ட்வீட்.. வயிறு எரியும் ரசிகர்கள்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் உடன் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி டேட்டிங் செய்து வருவதாக போட்டுள்ள ட்வீட் சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
18 வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றவர் சுஸ்மிதா சென். பாலிவுட்டில் 1996ம் ஆண்டு வெளியான டஸ்டக் படத்தில் அறிமுகமானார்.
தமிழில் 1997ம் ஆண்டு நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்திருந்தார் சுஷ்மிதா சென்.
கேஜிஎஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி..கோப்ரா படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஷக்கலக்கா பேபி
ரட்சகன் படத்தில் சைவமும் பிடிக்கும் அசைவமும் பிடிக்கும் என ஆடி பாடி நடித்த மிஸ் யூனிவர்ஸ் சுஷ்மிதா சென் அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் இடம்பெற்ற ஓப்பனிங் பாடலான ஷக்கலக்கா பேபி பாடலில் படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருப்பார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த சுஷ்மிதா சென்னுக்கு உடலில் ஏற்பட்ட ஒரு வித நோய் காரணமாக சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகினார்.

இரண்டு குழந்தைகள்
46 வயதாகும் சுஷ்மிதா சென் இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. ஆடிசன்ஸ் எனும் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த அவர் ரெனி சென், ஆலிஷா சென் என இரு மகள்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மூத்த மகளுக்கு திருமண வயது ஆகும் நிலையில், கடந்த 2018ம் ஆண்டு இளம் வயது ரோமன் ஷாவல் என்பவரை டேட்டிங் செய்து பரபரப்பை கிளப்பினார்.

பிரேக்கப்
பல வருட கேப்பிற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த சுஷ்மிதா சென் ஓடிடியில் ஆர்யா எனும் வெப் தொடரில் அதிரடியாக நடித்து அசத்தினார். கடந்த 2018ம் ஆண்டு ரோமன் ஷாவல் எனும் இசை கலைஞருடன் திடீரென சுஷ்மிதா சென்னுக்கு காதல் தீ பற்றிக் கொண்டது. கடந்த 2021ம் ஆண்டு இருவரும் பல இடங்களுக்கு ஜோடி போட்டு சுற்றி டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த ஆண்டு திடீரென இருவரும் பிரேக்கப் செய்வதாக அறிவித்தனர்.

லலித் மோடியுடன் காதல்
இந்நிலையில், தற்பொது முன்னாள் ஐபிஎல் பாஸ் லலித் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தனது சரி பாதி சுஷ்மிதா சென் என அவருடன் மாலத்தீவு உள்ளிட்ட இடங்களில் டேட்டிங் செய்த புகைப்படங்களை போட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். மோசடி வழக்கில் சிக்கி உள்ள லலித் மோடி இந்தியாவுக்கு திரும்பாமல் லண்டனில் இருந்து வரும் நிலையில், பாலிவுட் நடிகை சுஷ்மிதாவுடன் அவர் டேட்டிங் செய்து வருவது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்துள்ளது.

விரைவில் திருமணம்
நாங்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் தான் செய்து வருகிறோம். விரைவில் அதுவும் ஒருநாள் நடக்கலாம் என லலித் மோடி மற்றொரு ட்வீட்டில் அழகாக விளக்கமும் அளித்திருப்பது ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. 56 வயதில் 46 வயது பாலிவுட் நடிகையை மடக்கி விட்டாரே என முரட்டு சிங்கிள்ஸ் புலம்பி வருகின்றனர். லலித் மோடி தனது மனைவி மினல் மோடியை கடந்த 2018ல் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.