துணிவு படத்துக்கு அதிக தியேட்டர்கள்...? விஜய்யின் வாரிசுக்காக நேரடியாக களமிறங்கும் பிரபலம்!

சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படம் சொன்னபடி பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

வாரிசு படத்துக்குப் போட்டியாக அஜித்தின் துணிவும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதால் கோலிவுட்டே பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில், துணிவு படத்துக்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாக செய்திகள் வெளியானதால், விஜய்க்கு வாரிசு ரிலீஸுக்கு ஆதரவாக பிரபலம் ஒருவர் நேரடியாகவே களமிறங்குகிறாராம்.

வாரிசு ரிலீஸை யாராலும் தடுக்க முடியாது

வாரிசு ரிலீஸை யாராலும் தடுக்க முடியாது

பொங்கல் தினத்தில் கோலிவுட் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா காத்திருக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யும் அஜித்தும் நேருக்கு நேர் மோதுகின்றனர். விஜய் நடிப்பில் வாரிசு, அஜித்தின் துணிவு பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு காணப்படுகிறது. ஆனால்; தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த கட்டுப்பாடுகளால் வாரிசு சொன்னபடி வெளியாகுமா என சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், வாரிசு கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீஸாகும், அதை யாரும் தடுக்கவே முடியாது என படக்குழு உறுதியாக கூறியுள்ளது.

துணிவுக்கு அதிகமான திரையரங்குகள்?

துணிவுக்கு அதிகமான திரையரங்குகள்?

இந்நிலையில், அஜித்தின் துணிவு திரைப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது. இதனால், துணிவு படத்திற்கு 800 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. மொத்தமே தமிழ்நாட்டில் 1100 திரையரங்குகள் தான் இருக்கும் நிலையில், துணிவு படத்துக்கு 800 திரைகள் போய்விட்டால், வாரிசு படத்துக்கு சிக்கல் வரும் என சொல்லப்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை என தற்போது தெரியவந்துள்ளது. இருந்தாலும் துணிவு படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்து விடக்கூடாது என வாரிசு டீம் பரபரப்பாக வேலை பார்த்து வருகிறார்களாம்.

விஜய்க்காக களமிறங்கும் பிரபலம்

விஜய்க்காக களமிறங்கும் பிரபலம்

விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் வாங்கியுள்ளது. விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், வாரிசு தியேட்டர் ரைட்ஸையும் வாங்கி உள்ளதால் ரசிகர்களும் நிம்மதியடைந்துள்ளனர். இந்நிலையில், 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார், அவரே வாரிசு படத்தை ஏரியா வாரியாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம். இதனால், அஜித்தின் துணிவு படத்துக்கு நெருக்கடி கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், அதிகமான திரையரங்குகளை புக்கிங் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளராம். இதனால், வாரிசு - துணிவு தியேட்டர் பிஸினஸ்க்கு அதிகம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

பனையூரில் மீட்டிங், பிரியாணி விருந்து

பனையூரில் மீட்டிங், பிரியாணி விருந்து

முன்னதாக இரு தினங்களுக்கு முன்னர் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் விஜய். அப்போது அங்கு கூடிய ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டதோடு, பிரியாணி விருந்தும் கொடுத்து அசத்தினார் விஜய். இதனால் உற்சாகமான விஜய் ரசிகர்கள் வாரிசு படத்துக்கு வெறித்தனமான ஹிட் கொடுக்க வேண்டும் என காத்திருக்கின்றனர். வாரிசு ரிலீசுக்கு பிரச்சினை வரக்கூடாது என சீமான், லிங்குசாமி, பேரரசு உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X