»   »  தயாரிப்பாளர் மீது நடிகைசெக்ஸ் டார்ச்சர் புகார்

தயாரிப்பாளர் மீது நடிகைசெக்ஸ் டார்ச்சர் புகார்

Subscribe to Oneindia Tamil

பல்வேறு திரைப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நநடித்துள்ள லலிதா என்றநடிகை, தன்னை தயாரிப்பாளர் குருமூர்த்தி என்பவர் விடுதியில் அடைத்து வத்துசெக்ஸ் ரீதியாக சித்திரவதை செய்வதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

நாடோடி தென்றல் படத்தில் ஜனகராஜின் மனைவியாக நடித்து தமிழ் சினிமாவில்அறிமுகமானவர் லலிதா. இப்படத்தைத் தொடரந்து சதி லீலாவதி, நம்மவர், அட்ராஅட்ரா சக்கை உள்ளிட்ட பல படங்களிலும் சின்ன ரோல்களில் நடித்துள்ளார்.

தற்போது டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது மகளும் ஒரு நடிகைதான்.

இன்றுகாலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தலலிதா புகார் ஒன்றைக் கொடுத்தார். பின்னர் செய்திாயளர்களிடம் அவர் பேசுகையில்,

எனது கணவர் ஜெயேந்திர பாபு. அவரைப் பிரிந்து நான் தனியாக வாழ்கிறேன்.வயதான அப்பாவையும், அம்மாவையும் நான்தான் நடித்து காப்பாற்றுகிறேன்.

இந் நிலையில் எனக்கும், படத் தயாரிப்பாளர் குருமூர்த்திக்கும் இடையே நட்புஏற்பட்டது. எனக்கு மட்டும் நீ சொந்தமாக இரு. இனிமேல் நீ நடிக்கக் கூடாது என்றுகுருமூர்த்தி கூறியபோது அதை நான் ஏற்கவில்லை.

இதையடுத்து கோபம் அடைந்த அவர் என்னை லாட்ஜ் ஒன்றில் அடைத்து வைத்து,தினசரி செக்ஸ் டார்ச்சர் செய்தார். அடித்து உதைத்தார். வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார்.

நான் தொடர்ந்து நடிக்கவும், குருமூர்த்தியால் எனக்கு எந்த தொந்தரவும் ஏற்படக்கூடாது என்றும், போலீஸ் பாதுகாப்பு கோரியும் புகார் கொடுத்துள்ளேன் என்றார்லலிதா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil