3வது முறையாக நான் செத்துப் பிழைத்தேன்..நலமாக இருக்கிறேன்.. கதறி அழுத அப்துல் ஹமீது!
சென்னை: தனது தனித்துவமான குரலால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பி.எச். அப்துல் ஹமீது இறந்துவிட்டதாக நேற்று ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பரவிய நிலையில் மாண்டவன் மீண்டு வந்து பேசுகிறானோ என்று சிலர் வியத்து பார்க்கலாம், நான் இறந்துவிட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று பி.எஸ்.அப்துல் ஹமீது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த அப்துல் ஹமீது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாட்டு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வந்து, பல ரசிகர்களை கொள்ளை கொண்டார். அவரது கணீர் குரலும், அழுத்தமான தமிழ் உச்சரிப்பும் அவரை சின்னத்திரையில் பிரபலமாக்கியது. பல ஆண்டுகள் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவர், இலங்கையில் வசித்து வருகிறார்.

நலமாக இருக்கிறேன்: 90ஸ் கிட்ஸ் ஆதரவை பெற்ற அப்துல் ஹமீது நேற்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தவிட்டதாக ஒரு வதந்தி பரவிய நிலையில் இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அப்துல் ஹமீது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். மாண்டவன் மீண்டு வந்து பேசுகிறானோ என்று சிலர் வியத்து நோக்கக்கூடும், நேற்று இலங்கை நேரப்படி நள்ளிரவு முதல் இந்த நேரம் வரை நித்திரை கொள்ளவில்லை, இந்த விஷமான செய்தியை கேட்டு ஆயிரம் பல்லாயிரம் உறவுகள் தொலைபேசியில் என்னை அழைத்து,என் குரலைக்கேட்ட பின்புதான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். அதிலும், சிலர் என் குரலை கேட்டதும்,கதறி அழுததைக் கேட்டு என்னால், தாங்க முடியவில்லை. இத்தனை ஆயிரம் அன்பு, பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை என்று நான் நினைத்துக்கொண்டேன்.
மரணம் மனிதனுக்கு தரும் வரம்: நேற்று இலங்கை பத்திரிக்கை ஒன்றில் நான் கட்டுரை ஒன்று எழுதி இருந்தேன், அதன் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது. மரணம் மனிதனுக்கு தரும் வரம், அவனை பற்றிய எதிர்மறையான சிந்தனைகளை எல்லாம் மறக்கச்செய்து, அவனின் நல்ல பக்கத்தை மட்டும், அவனின் நல்ல பண்புகளை எல்லாம் பேசி மகிழ்வது அப்படி ஒரு அனுபவம் தான் நேற்று எனக்கு கிடைத்து இருக்கிறது.பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் என்னை நேசித்தாலும், என் துறை சார்ந்த பொறாமை காரணமாக, மதமாச்சரியங்கள் கொண்ட சிலர் இதுபோன்ற செய்திகளை பரப்பி உள்ளனர்.
செத்துப் பிழைத்தேன்: மூன்றாவது முறையாக நான் செத்துப் பிழைக்கிறேன், முதல் அனுபவம், 1993ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது என்னையும் என் மனைவியையும் உயிரோடு கொளுத்திவிட்டார்கள் என்ற வதந்தி பரவியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப் தளம் ஒன்றில் பிரபல தொகுப்பாளர் மரணம் கதறி அழுத குடும்பம் என செய்தி வெளியிட்டு இருந்தார்கள். அது இரண்டாவது முறை. இது மூன்றாவது முறை, மூன்று முறை நான் உயிர்த்தெழுந்தேன் என்று நகைச்சுவையாக எண்ணத்தோன்றுகிறது, எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என அந்த வீடியோவில் அப்துல் ஹமீது உருக்கமாக பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











