நிலச்சரிவில் சிக்கி 18 மணிநேரம் அவதி, 3 நாட்களாக காவலர் குடியிருப்பில் தஞ்சம்: ஜெயராம் உருக்கம்
Recommended Video

திருவனந்தபுரம்: நிலச்சரிவில் சிக்கி 18 மணிநேரம் தவித்ததாக நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெயராம் தனது மகள் மாளவிகா, மனைவி பார்வதியுடன் சென்னையில் இருந்து காரில் கேரளாவுக்கு சென்றார். கேரளாவில் காரில் சென்று கொண்டிருந்தபோது நிலச்சரிவில் சிக்கினார்.

இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
என் மனைவி, மகள், நான் நிலச்சரிவில் சிக்கி 18 மணிநேரம் அவதிப்பட்டோம். வடக்கன்சேரி போலீசார் வந்து எங்களை பத்திரமாக மீட்டனர். எங்கும் செல்ல வழி இல்லாததால் 3 நாட்களாக காவலர் குடியிருப்பில் தங்கியிருந்தோம். அவர்கள் எங்களை நல்லபடியாக கவனித்துக் கொண்டனர். காவல் துறையினருக்கு மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.
3 நாட்கள் கழித்து வீடு திரும்பிய ஜெயராம் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார். நிவாரண முகாம்களில் இருக்கும் மக்களுக்கு தண்ணீர், மாத்திரை, பிஸ்கட், உடை உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார் ஜெயராம்.


Click it and Unblock the Notifications











