விஜய் ஆண்டனி மகளின் கடைசி பயணம்.. ஊரே திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி!

சென்னை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் கடைசி பயணம் தொடங்கி உள்ளது.

இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகராக இவர் நடித்த முதல் படம் நான் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

Last journey of actor Vijay Antonys daughter Meera antony

விஜய் ஆண்டனி தொகுப்பாளியான பாத்திமாவை 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வருகிறார்.

உயிரிழந்தார்: விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று மின்விசிறியில் தூக்கில் தொங்கியதைப் பார்த்த விஜய் ஆண்டனி உதவியாளர்களை அழைத்து, மீராவை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

பிரேத பரிசோதனை: இதையடுத்து, உடலை போலீசார் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பிரதே பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மீராவின் உடல் விஜய் ஆண்டனியிடம் ஒப்படைக்கப்பட்டது.இதன் பின் டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில், முன்னணி நடிகர்கள், நடிகைகள், பலரும் விஜய் ஆண்டனி வீட்டிற்கு வந்து அவரது மகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு விஜய் ஆண்டனிக்கு ஆறுதலையும் கூறி வருகின்றனர்.

கடைசி பயணம்: நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள புனித தெரசா தேவாலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு தேவாலயத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.

இதன் பின் மீராவின் உடல் மீண்டும் மலரால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஏற்றப்பட்டு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. விஜய் ஆண்டனி மகளின் கடைசிப்பயணத்தைப் பார்த்து வழிநெடுகில் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

விஜய் ஆண்டனி மகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்களின் புகைப்படங்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X