ஒரே வருடத்தில் இத்தனை சம்பவங்களா? தெறிக்கவிடும் விஜய் சேதுபதி.. வியந்து பார்க்கும் கோலிவுட்!
2019 ஆண்டு விஜய் சேதுபதிக்கு ஒரு பொன்னான ஆண்டாகவே இருந்துள்ளது.
Recommended Video
சென்னை: 2019 ஆண்டு விஜய் சேதுபதிக்கு ஒரு பொன்னான ஆண்டாகவே இருந்துள்ளது. இந்த ஆண்டில் அவரை ஆச்சர்யப்பட வைத்த சம்பவங்களும் அவர் செய்த சாதனைகளும் நிறைய இருக்கிறது.
தனக்கென தமிழ் சினிமாவில் தனிப்பாதையை அமைத்துக் கொண்டு ஹீரோவுக்கான எந்த அடையாளங்களும் இல்லாமல் இருப்பவர் விஜய் சேதுபதி. கதைக்காகவும் கேரக்டருக்காகவும் உழைக்கக்கூடியவர் தான் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி.
பல வித்தியாசமான வேடங்கள் மூலம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்ற விஜய் சேதுபதிக்கு 2019 ஆம் ஆண்டு ஓர் சிறந்த ஆண்டாக இருந்ததுள்ளது. ஆம் 2019 ஆண்டில் விஜய் சேதுபதியை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சம்பவங்கள் பல அரங்கேறின.

பேட்ட & சூப்பர் டீலக்ஸ்
2019 ஆண்டு வெளியான ரஜினியின் 165-வது படமான பேட்ட படத்தில் விஜய் சேதுபதி ஜித்து என்னும் கதாபாத்திரத்தில் வில்லன் வேடத்தில் நடித்து மிரட்டினார். இந்த படத்தில் அவரின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. மேலும் இதே ஆண்டில் தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கையாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

செம பாஸ்
இந்த ரெண்டு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று மக்களின் பேராதரவையும் பாராட்டையும் பெற்றார் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பை பாலிவுட் நடிகர்களும் பாராட்டினார்கள். மேலும் இந்த ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கை ஷில்பாவாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் விஜய் சேதுபதி.

ஷாருக்கான் பாராட்டு
அந்த விழாவில் பங்கேற்ற பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் விஜய் சேதுபதியை ''இந்தியாவின் சிறந்த நடிகர்'' என்று அழைத்தார். அதோடு, ஷாருக்கானிடமிருந்து அத்தகைய பாராட்டுக்களை நான் எதிர்பார்க்கவில்லை, நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன் என்று இதுகுறித்து விஜய் சேதுபதி தெரிவித்தார்.

அமீர்கானுடன் படம்
மேலும் விஜய் சேதுபதி நடித்து வெளியாகவிருக்கும் 'சங்க தமிழன்' ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அமீர் கான் சென்று சர்ப்ரைஸ் கொடுத்தார். அங்கு விஜய் சேதுபதியின் நடிப்பைப் பார்த்து வியந்தவர், அவருடன் கைகோர்த்து படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். இப்போது விஜய் சேதுபதி அமீர்கானுடன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தெலுங்கு சினிமா
இதுமட்டுமின்றி ஆந்திராவின் சுதந்திர போராட்டத்தின் போது புரட்சி வெடிக்க காரணமாக இருந்த, சயீராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருக்கின்றது சயிரா நரசிம்ம ரெட்டி. ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த பிரமாண்ட படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி ஜடா முடி தரித்து, நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு சாமியார் போல இருக்கிறார்.

செம பாஸ்
சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய்சேதுபதி தமிழ் மன்னனாக நடித்துள்ளார். இவரின் நடிப்பை சிரஞ்சீவி வியந்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களையும் தன் நடிப்பின் மூலம் பெரிதும் ஈர்ப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

தளபதி 64
பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கும் தளபதி 64 படத்தின் முதல் அப்டேட் சமீபத்தில் வெளியானது. முதல் அப்டேட்டாக விஜய் சேதுபதி விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இந்த அறிவிப்பு வந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் தளபதி 64 படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்னும் அதிகரித்து வருகிறது!


Click it and Unblock the Notifications











