அக்‌ஷய், சாரா அலி கானுடன் தனுஷ் நடிக்கும் இந்திப் படம்.. டெல்லியில் கடைசிக்கட்ட படப்பிடிப்பு!

By

சென்னை: தனுஷ் நடிக்கும் இந்திப் படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு, டெல்லியில் நடந்து வருகிறது.

தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஆனந்த்.எல்.ராய்

ஆனந்த்.எல்.ராய்

இந்தப் படம் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் நடித்து வரும் கர்ணன் படத்தில் அவர் போர்ஷன் முடிந்துவிட்டது. இப்போது அட்ரங்கி ரே என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதை ஆனந்த்.எல்.ராய் இயக்குகிறார். இவர்,
தனுஷ் நடித்த ராஞ்ஜனா என்ற படத்தை இயக்கியவர்.

இளம் ஹீரோயின்

இளம் ஹீரோயின்

இந்த படத்தில் தனுஷூடன், அக்‌ஷய் குமார், பாலிவுட்டின் இளம் ஹீரோயின் சாரா அலி கான் நடிக்கின்றனர். ஏ.அர்.ரகுமான் இசை அமைக்கிறார். பூஷன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

தடைபட்ட ஷூட்டிங்

தடைபட்ட ஷூட்டிங்

தனுஷ், சாரா அலிகான் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் கொரோனா லாக்டவுனால் ஷூட்டிங் தடைபட்டது. லாக்டவுனுக்கு பிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. தனுஷ் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

டெல்லியில் அக்‌ஷய்

டெல்லியில் அக்‌ஷய்

இப்போது டெல்லியில் தொடங்கி நடந்து வருகிறது. இதுபற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார் தனுஷ். இந்நிலையில், டெல்லியில் நடக்கும் ஷூட்டிங்கில் அக்‌ஷய் குமார் நேற்று இணைந்திருக்கிறார். இந்த மாதம் 29 ஆம் தேதி வரை அங்கு ஷூட்டிங் நடக்கிறது.

கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன்

இதில் தனுஷ், அக்‌ஷய்குமார், சாரா அலிகான் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. அதோடு படம் முடிவடைகிறது எனப் படக்குழு கூறியுள்ளது. இந்தப் படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் தனுஷ் நடிக்க இருக்கிறார். ஜனவரி 6 ஆம் தேதி இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X