கடந்த ஆண்டு இதே மாதம் கபிலனின் மகள்.. இப்போது விஜய் ஆண்டனி மகள்.. தொடர் தற்கொலைக்கு என்ன காரணம்!

சென்னை: கடந்த ஆண்டு இதே மாதம் பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கபிலனின் மகள் தூரிகை கபிலன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டில் திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதால், இந்த துயரமான முடிவை அவர் எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் சொல்லப்பட்டது.

Last year Kabilans daughter, Now Vijay Antonys daughter Meera, What is the reason for serial suicide

தூரிகை கபிலன்: எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் திறமைகளை கொண்ட திறமையான பெண்ணான தூரிகையின் தற்கொலை முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. துணிச்சலான, தைரியமான, தற்கொலை குறித்து விழிப்புணர்வு நடத்திய இந்த பெண்ணா தற்கொலை செய்துகொண்டார் என பலரையும் கவலையில் ஆழ்த்தியது.

விஜய் ஆண்டனியின் மகள்: அந்த கவலையே இன்னும் மனதை விட்டு மறையாத நிலையில், 16 வயதே ஆன பிஞ்சு விஜய் ஆண்டனியின் மகள் உயிரை விட்டுள்ளார். அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு அவரது மன அழுத்தம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

Last year Kabilans daughter, Now Vijay Antonys daughter Meera, What is the reason for serial suicide

தொடர் தற்கொலைகள் ஏன்: இதுபோன்ற தொடர் தற்கொலைக்கு பெரும்பாலும் மன அழுத்தம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஓடி, ஆடி, அழகாக விளையாட வேண்டிய வயதில் எங்கு இருந்து மன அழுத்தம் வருகிறது. படிப்பு படிப்பு என குழந்தைகளை கட்டாயப்படுத்துவது, எந்த தோல்வியையும் தாங்கிக் கொள்ளும் மனநிலை இல்லாதது தான் இதுபோன்ற விபரீத முடிவு எடுக்க காரணம். தோல்வியை தங்கிக் கொள்ளும் மன தைரியத்தை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் பொறுப்பு பெற்றோருக்கு உண்டு.

Last year Kabilans daughter, Now Vijay Antonys daughter Meera, What is the reason for serial suicide

மன அழுத்தம்: செல்போன், லேப்டாப், டிவி என எந்த நண்பர்களின் தொடர்பும் இல்லாமல், நான்கு சுவற்றுக்குள் அடைந்து கிடப்பதால் இது போன்று மன அழுத்தம் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, நல்ல நண்பர்கள், நல்ல சூழ்நிலை தற்கொலை எண்ணத்தை தவிர்த்துவிடும், முடிந்தவரை மனம் விட்டு பேசுங்கள். இது ஒன்றே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட சிறந்த வழி.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X