வாழ்க்கைன்னா.. சைத்தான், சனியன் இருக்கும்.. சீக்கிரம் நடிப்பேன்.. வைரலாகும் வடிவேலு வீடியோ.. ஆனால்?

சென்னை: வைகைப்புயல் வடிவேலுவின் பிறந்தநாள் நேற்று வேற லெவல் டிரெண்டிங்கில் கொண்டாடப்பட்டது.

Recommended Video

அன்போடு வாழ்த்திய நேசத்தின் நெஞ்சங்களுக்கு பாசத்தின் நன்றிகள் - வைரலாகும் வடிவேலு வீடியோ

இந்நிலையில், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும், முக்கியமா மீம் க்ரியேட்டர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக வடிவேலு பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், சீக்கிரமே நடிக்க வருகிறேன் என அவர் சொன்னதை கேட்ட ரசிகர்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேற லெவல் டிரெண்டிங்

வேற லெவல் டிரெண்டிங்

மீம்களின் அரசனான காமெடி கிங் வடிவேலுவின் 60வது பிறந்தநாளை ரசிகர்கள் வேற லெவலில் டிரெண்ட் செய்து கொண்டாடினர். ஏகப்பட்ட ட்வீட்கள், மீம்கள், மாஷ் அப்கள் என சமூக வலைதளங்கள் நகைச்சுவை பெருக்கெடுத்து ஓடின. அவற்றுக்கெல்லாம் நன்றி சொல்லும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை வடிவேலு வெளியிட்டுள்ளார்.

அம்மாவுக்கு அடுத்து நீங்கதான்

அம்மாவுக்கு அடுத்து நீங்கதான்

அந்த வீடியோவில் என் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி, அம்மா இல்லைன்னா நான் இந்த பூமியிலேயே பிறந்திருக்க முடியாது. அது போல ரசிகர்கள் ஆகிய நீங்க இல்லைன்னா வடிவேலுன்னு ஒரு ஆளே கிடையாது. என் அம்மாவுக்கு அடுத்து நீங்கதான் என ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் வடிவேலு.

சனியன், சைத்தான்

சனியன், சைத்தான்

எல்லாரும் என்கிட்ட எப்போ நடிக்க வருவீங்கன்னு கேட்பீங்க, நிச்சயம் கூடிய சீக்கிரமே நல்ல ஒரு பிரம்மாண்ட என்ட்ரியோட உங்களை திரையில் சந்திப்பேன். வாழ்க்கைன்னா சில சனியன், சைத்தான்கள் இருக்கத்தான் செய்யும், அது அப்பப்ப நம்ம வாழ்க்கையில விளையாடிட்டு போகும். ரசிகர்கள் அன்பு அதை எல்லாத்தையும் ஓவர் டேக் பண்ணி என்னை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் எனக் கூறியுள்ளார்.

எமனே வந்தாலும்

எமனே வந்தாலும்

எமனே வந்தாலும் தலைவா உன் நடிப்பை கண்டு சிரித்தே மறந்துவிடுவான் உன் உயிரை பறிப்பதற்கு என்றும், அது தொடர்பான மீம்களையும் போட்டு, வடிவேலுவை உச்சி குளிர வைத்து வருகின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள். வடிவேலுவின் இந்த புதிய வீடியோவுக்கு கீழே ஏகப்பட்ட கமெண்ட்டுகள் மலை போல குவிந்து வருகின்றன.

போன வருஷம்

போன வருஷம்

ஆனால், இந்த வீடியோ புதுசு அல்ல என்றும், இது போன வருஷம் சன் டிவிக்கு அவர் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேகமாக கொடுத்த வீடியோ என ரசிகர்கள் ஆதாரத்துடன் காட்டி உள்ளனர். ஏற்கனவே வடிவேலு வெளியிட்ட ஏகப்பட்ட வீடியோக்கள் அந்த ட்விட்டர் ஐடியில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. இது வடிவேலுவே கட் பண்ணி போட சொன்ன வீடியோவா? அல்லது அவரது ரசிகர்கள் செய்யும் வேலையா? என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X