twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசை அரசி.. சிறந்த பின்னணி பாடகி முதல் பாரத ரத்னா வரை.. லதா மங்கேஷ்கரின் விருதுகள் ஓர் பார்வை!

    |

    சென்னை: இந்திய இசையுலகின் ராணியாகவே 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்து வந்த இசை ராணி லதா மங்கேஷ்கர் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    Recommended Video

    பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார் | Latha Mangeshkar Biography

    1959ம் ஆண்டு மதுமதி படத்திற்காக சிறந்த பின்னணி பாடகி விருது வென்றது முதல் 2001ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வரை வாழும் போதே அத்தனை விருதுகளையும் அள்ளி அசத்தியவர் இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர்.

    அவர் வாரிக் குவித்த முக்கிய விருதுகள் பற்றிய ஒரு சிறிய பார்வையை இங்கே பார்ப்போம்..

    சோதனைகளை சாதனைகளாக்கிய லதா மங்கேஷ்கர்.. அரை நூற்றாண்டாக மாயக்குரலால் ரசிகர்களை கவர்ந்தார் !சோதனைகளை சாதனைகளாக்கிய லதா மங்கேஷ்கர்.. அரை நூற்றாண்டாக மாயக்குரலால் ரசிகர்களை கவர்ந்தார் !

    8.12 மணிக்கு

    8.12 மணிக்கு

    பிப்ரவரி 6ம் தேதியான இன்று காலை 8.12 மணிக்கு பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். கடந்த மாதம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் உடல் நிலை தேறி வந்த நிலையில், பிப்ரவரி 5ம் தேதி மீண்டும் அவரது உடல்நிலை மோசமானதால் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை 8.12 மணிக்கு அவரது இன்னுயிர் பிரிந்தது.

    விருதுகளின் அரசி

    விருதுகளின் அரசி

    1959ம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகிக்கான பிலிம்ஃபேர் விருது மதுமதி படத்திற்காக பெற்றார் லதா மங்கேஷ்கர். அதனை தொடர்ந்து, 1963ம் ஆண்டு பீஸ் சால் பாத் படத்திற்காக பிலிம்ஃபேர் விருது பெற்றார். 1966ம் ஆண்டு வெளியான கண்டன், அதே ஆண்டு வெளியான சாதி மனசா படத்திற்காக சிறந்த பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் என இரு விருதுகளை அள்ளினார்.

    பத்ம விருதுகள்

    பத்ம விருதுகள்

    இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகளை பெற்றுள்ளார் லதா மங்கேஷ்கர். 1969ம் ஆண்டு பத்ம பூஷன் விருது பெற்ற லதா மங்கேஷ்கர் 1989ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது பெற்றார். 1993ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. பிலிம்ஃபேரின் ஏகப்பட்ட சிறப்பு விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை போல, பல்வேறு மொழிகளிலும் சிறந்த பின்னணி பாடகி உள்ளிட்ட பல வகையான விருதுகளை வென்றுள்ளார்.

    தேசிய விருது

    தேசிய விருது

    1972ம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை Parichay எனும் படத்திற்காக பெற்ற இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் 1974ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் (அதிகமான பாடல்களை ரெக்கார்டு செய்தவர்). கோரா ககாஸ் படத்திற்காக 1974ம் ஆண்டு தேசிய விருது வென்றார். 1990ம் ஆண்டு லெகின் படத்தின் பாடலை பாடியதற்காக தேசிய விருது வென்றார். 1999ம் ஆண்டு என்டிஆர் தேசிய விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டது.

    பாரத ரத்னா

    பாரத ரத்னா

    2000ம் ஆம் ஆண்டு IIFA சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 2001ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டு மகாராஷ்ட்ரா ரத்னா விருது வாங்கிய முதல் நபர் இவர் தான். 2002ம் ஆண்டு ஆஷா போஸ்லே விருது பெற்ற முதல் நபரும் இவர் தான். 2007ம் ஆண்டு பிரான்ஸ் நாடு அந்த நாட்டின் உயரிய விருதை இவருக்கு வழங்கி சிறப்பித்தது. எல்லாவற்றையும் விட கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவின் மகள் என்கிற விருது அவரது 90வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய அரசாங்கம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Nightingale of India Lata Mangeshkar passed away on February 6 at 8:12 am at Breach Candy hospital. To honour her memory, we shall take a look at her numerous awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X