ராணுவ வீரர்களுக்காக, கொரோனா பாதித்த காலங்களில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த லதா

மும்பை : பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் இன்றைய தினம் காலமானார்.

Recommended Video

பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார் | Latha Mangeshkar Biography

அவரது பிறந்தநாள் செப்டம்பர் 28ம் தேதி கொண்டாட்டங்களை அவர் கடந்த சில வருடங்களில் தவிர்த்து வந்தார்.

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் கொரோனா போன்ற காரணங்களுக்காக தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவர் தவிர்த்தார்.

கொண்டாடப்பட்ட பாடகி

கொண்டாடப்பட்ட பாடகி

இந்தியாவின் நைட்டிங்கேல், மெலடி குயின் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் லதா மங்கேஷ்கர். கடந்த 80 ஆண்டுகளாக இந்திய மொழிகளில் இவர் சிறப்பான பல பாடல்களை கொடுத்துள்ளார். ரசிகர்கள் இவரது குரலில் வெளியான பாடல்களில் மிகவும் கொண்டாட்டத்தை உணர்ந்தனர்.

லதா மங்கேஷ்கர் மறைவு

லதா மங்கேஷ்கர் மறைவு

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த லதா மங்கேஷ்கர் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

மனித நேயம்

மனித நேயம்

தான் வாழும் காலத்தில் தன்னுடைய குரலுக்காக மட்டுமின்றி சிறப்பான மனித நேயத்திற்காகவும் போற்றப்பட்டவர் லதா மங்கேஷ்கர். இவரது மனித நேயம் பல நேரங்களில் வெளிப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் கொரோனா பாதித்தவர்களுக்காக தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார் லதா மங்கேஷ்கர்.

கொண்டாட்டத்தை தவிர்த்த லதா

கொண்டாட்டத்தை தவிர்த்த லதா

கொரோனா காலத்தில் தான் இரண்டாவது பிறந்தநாளை எதிர்கொள்வதாகவும் இந்த நேரத்தில் எப்படி பிறந்தநாளை சிறப்பாக எதிர்கொள்வது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதிகமான குழந்தைகள் தங்களின் பெற்றோரை இழந்துள்ள நேரத்தில் தான் பிறந்தநாளை கொண்டாடுவது சாத்தியமற்றது என்றும் கூறியிருந்தார்.

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

இதேபோல கடந்த 2016ல் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், அதையொட்டி தனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தவிர்த்தார். அந்த நேரத்தில் தனக்கு பிறந்தநாளுக்காக மலர்களை அனுப்புவதற்கு பதிலாக உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்யவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதேபோல 2018லும் அவர் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X