twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சோதனைகளை சாதனைகளாக்கிய லதா மங்கேஷ்கர்.. அரை நூற்றாண்டாக மாயக்குரலால் ரசிகர்களை கவர்ந்தார் !

    |

    மும்பை : தனது மென்மையான குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட இசைகுயில் லதாமங்கேஷ்கர் இன்று நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

    Recommended Video

    பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார் | Latha Mangeshkar Biography

    மயக்கும் மந்திரக்குரலால் ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்கவைத்த மெலடி குயின் 1929ம் ஆண்டு செப்டம்பர் 28ந் தேதி பிறந்தார். இந்த மழலையின் குரல் பின்னாளில் அனைவரையும் வசீகரிக்கும் குரலாக மாறும் என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

    கொரோனா எனும் கொடூர அரக்கனிடம் சிக்கி 28 நாள் போராட்டத்திற்கு பிறகு கான குயில் இன்று நம்மைவிட்டு சென்றுள்ளது. திரைத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக கொடிகட்டி பறந்த லதா மங்கேஷ்கரின் சாதனைகள சொல்லில் அடங்காது. இவற்றில் சில சாதனை...

    வளையோசையின் 2வது ஓசையும் நின்றது.. பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்வளையோசையின் 2வது ஓசையும் நின்றது.. பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

    திருப்புமுறை

    திருப்புமுறை

    இசையின் மீது தீராத காதல் கொண்ட லதா மங்கேஷ்கர் 1942ம் ஆண்டு முதல் முதலில் மராத்திப் பாடலைப் பாடி பாடகி என்ற அங்கீகாரத்தைப் பெற்றார். மஜ்பூர் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல் இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பல முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் பாடி இன்று வரை தனித்துவமான பாடகி என்று பெயர் எடுத்துள்ளார்.

    4 தலைமுறை கடந்த பாடகி

    4 தலைமுறை கடந்த பாடகி

    1940ல் தொடங்கி 2014வரை ஆஷா போஸ்லே, சுரையா, ஷம்ஷாத் பேகம், உஷா மங்கேஷ்கர், கிஷோர் குமார், முகமது ரஃபி, முகேஷ், தலத் மஹ்மூத், மன்னா டே போன்ற பல பாடகருடன் இணைந்து டூயட் பாடியுள்ளார். 4 தலைமுறைகளை கடந்த பாடகி என்ற பெருமை லதா மங்கேஷ்கருக்கு உண்டு. கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

    ஏராளமான விருதுகள்

    ஏராளமான விருதுகள்

    பாரத ரத்னா, தாதாசாஹெப் பால்கே விருது, பத்மபூஷன்,பத்ம விபூஷன், என்.டி.ஆர் விருது, லண்டனிலுள்ள ஐ.ஐ.எப்.ஏ மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த பின்னனி பாடகருக்கான மில்லேனியம் விருது, பிரெஞ்சு அரசின் உயரிய விருது,தேசிய விருது, பிலிம்பேர் விருது என சினிமாத்துறை சார்ந்த அனைத்து முக்கியான விருதுகளையும் பெற்றுள்ளார். கின்னஸ் சாதானையிலும் இடம் பிடித்துள்ளார் லதா மங்கேஷ்கர்.

    சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா மற்றும் நிமோனியா உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜனவரி 11ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பல நாட்களாக ஐசியுவில் இருந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேறி வந்த நிலையில் இன்று மீண்டும் மோசமடைந்தது. இதையடுத்து, அவருக்கு மீண்டும் வென்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Bollywood singer Lata Mangeshkar Passed away. captivating fans with her magical voice for half a century
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X