லதா மங்கேஷ்கர் “இசையால் என்றென்றும் வாழ்வார்“… பிரபலங்கள் இரங்கல் !
சென்னை : இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா பங்கேஷ்கர் இந்தி, தமிழ், மராத்தி என பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
Recommended Video
லதா மங்கேஷ்கர் முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். கடந்த 70 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பொக்கிஷம்
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள போனிக்கபூர், இந்த செய்தி ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. லதா மங்கேஷ்கரின் பாடல்கள் வரும் தலைமுறைகளுக்குப் பொக்கிஷமாக இருக்கும். பாடலின் மூலம் அவர் ஒரு பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்.அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

இசையால் என்றென்றும் வாழ்வார்
நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியாவின் நைட்டிங்கேல், லதா ஜியின் மறைவு பற்றி கேட்க மனம் உடைந்து வார்த்தைகள் இல்லாமல் இருக்கிறது. இந்திய சினிமா அதன் ரத்தினங்களில் ஒன்றை இழந்துவிட்டது... ஆனால் அவர் தனது இசையால் என்றென்றும் வாழ்வார். குடும்பத்தாருக்கு எனது இதயப்பூர்வமான அனுதாபங்கள். என பதிவிட்டுள்ளார்.

சகாப்தம் முடிந்தது
நடிகர் அல்லு அர்ஜூன் தனது ட்விட்டர் பக்கத்தில், இது ஒரு சோகமான நாள். இந்தியாவின் நைட்டிங்கேல் என்ற சகாப்தம் முடிந்துள்ளது. லதாமங்கேஷ்கர் ஜி இப்போது இல்லை என்றாலும் தன் பாடல்கள் மூலம் மக்களின் இதயங்களில் வாழ்வார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

அவரின் பாடல்கள் நிலைத்து இருக்கும்
நடிகை பூமிகா தனது ட்விட்டர் பக்கத்தில் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், லதா ஜி இன்று நம்மை விட்டு பிரிந்தாலும் தலைமுறை தலைமுறையாக என்றும் நிலைத்து நிற்கும் பாடல்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளார் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











