லதா மங்கேஷ்கரின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கு யார் வாரிசு ?... உற்று நோக்கும் பாலிவுட் !
மும்பை : லதா மங்கேஷ்கரின் கோடிக்கணக்கான சொத்துக்கு யார் வாரிசு என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், அவரது லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை சுக்குநூறாக உடைத்துவிட்டு இந்த மண்ணைவிட்டு பிரிந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மும்பையில் தகனம் செய்யப்பட்டது.
லதா மங்கேஷ்கரின் அஸ்தியை அவரது உறவினர்கள் நாசிக்கில் அமைந்துள்ள கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ராமகுண்டத்தில் கரைத்தனர்.

லதா மங்கேஷ்கர்
இசைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் லதா மங்கேஷ்கர். 1942ம் ஆண்டு தனது 13வயதில் தனது இசை பயணத்தை தொடங்கினார். இசையின் மீது தீராத காதல் கொண்ட லதா மங்கேஷ்கர் இசையை தனது குடும்பமாக நினைத்து திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்.

40 லட்சம் சம்பளம்
13வயதில் 25 ரூபாய் சம்பளம் பெற்ற லதா மங்கேஷ்கர் பின் நாளில் ஒரு பாடலுக்கு 40 லட்சம் வரை பெற்றார். கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்திருந்த அவருக்கு கணவரோ, குழந்தைகளோ இல்லாதால் இந்த சொத்துக்கள் பற்றிய விவாதம் உருவாகி உள்ளது.

பழங்கால வீடு
லதா மங்கேஷ்கருக்கு மும்பையில் பெடார் சாலையில் ஒரு பழங்கால வீடு மற்றும் ஒரு பெரிய பங்களா உள்ளது. மேலும், அவர் பாடிய பாடல்களுக்கு ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் ராயல்டி வருகிறது. அவரது சகோதரி ஆஷா போன்ஸ்லேவுக்கு சொந்தமான சொத்திலும் இவருக்கும் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

360 கோடி சொத்து
லதா மங்கேஷ்கர் அழகான புடவைகள் அதற்கு தகுந்தது போல நகைகளை அணிவதில் விருப்பம் கொண்டவர் இதனால் ஏராளமான விலை உயர்த்த புடவைகள், நகைகளை வைத்துள்ளார். லதா மங்கேஷ்கருக்கு கார்களும் மிகவும் பிடிக்கும் என்பதால், பல விலையுயர்ந்த கார்களும் உள்ளன. மொத்தத்தில் அவரின் சொத்தின் மதிப்பு 360 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

யார் வாரிசு
இந்த சொத்துக்களை லதா மங்கேஷ்கரின் வழக்கறிஞர் மும்முரமாக கவனித்து வருகிறார். வாரிசாக யார் பெறுவார்கள் என்பதை விரைவில் அவர் அறிவிப்பார் என்றும், அவரது குடும்பத்தில் யாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்? மேலும் சொத்து முழுவதும் தந்தையின் பெயரில் லதா மங்கேஷ்கர் உருவாக்கிய அறக்கட்டளைக்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது. அவரது சகோதரர் ஹிருதய்நாத் மங்கேஷ்கர் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ததால், மறைந்த பாடகரின் சொத்தை அவர் வாரிசாகப் பெறுவார் என்று சொல்லபப்டுகிறது. இருப்பினும், இது அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் எதுவும் இதுவரை வரவில்லை.


Click it and Unblock the Notifications











