twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    4 தலைமுறை பாடகர்களுடன் பாடிய லதா மங்கேஷ்கர்

    |

    1950 களில் முகேஷ், கிஷோர் குமார், பிறகு அவரது மகன்கள், 90 களில் புதிய வரவான பாடகர்கள், அதன் பின்னர் 2000 க்குப்பின் வந்த பாடகர்கள் என 4 தலைமுறை பாடகர்களுடன் பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர்.

    1943 ம் ஆண்டு தனது 13வது வயதில் தனது திரையுலக இசைப்பயணத்தை துவக்கிய லதா மங்கேஷ்கர் ஏறக்குறைய 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் 30,000 க்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார். தலை சிறந்த இசையமைப்பாளர்கள், பாடகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார் லதா மங்கேஷ்கர்.

    இந்திய நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர், சினிமா பிரபலங்கள் இந்திய நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர், சினிமா பிரபலங்கள்

    டாப் பாடகர்களுடன் பாடிய லதா

    டாப் பாடகர்களுடன் பாடிய லதா

    1940 களில் துவங்கி, 1970 கள் வரை லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, சுரையா, ஷம்ஷத் பேகம், உஷா மங்கேஷ்கர், கிஷோர் குமார், முகமது ரஃபிக், முகேஷ், தலத் முகம்மது, மன்னா தேய், ஹேமந்த் குமார், ஜி.எம்.துர்ராணி, மகேந்திர கபூர் ஆகியோருடன் இணைந்து பல பாடல்களை பாடி உள்ளார். 1964 ம் ஆண்டு மைன் பி லடுக்கி ஹுன் படத்தில் சந்தா சே ஹோகா பாடலை பி.பி.ஸ்ரீநிவாசுடன் இணைந்து பாடினார் லதா மங்கேஷ்கர்.

    அப்பாக்களை தொடர்ந்து மகன்

    அப்பாக்களை தொடர்ந்து மகன்

    லதா மகேஷ்கருடன் இணைந்து பல புகழ்பெற்ற பாடல்களை பாடிய முகேஷ் 1976, முகம்மது ரஃபி மற்றும் கிஷோர் குமார் ஆகியோர் 1980 களிலும் உயிரிழந்தனர். அதன் பிறகு ஷபீர் குமார், சைலேந்திர சிங், முகேஷின் மகன் நிதின் முகேஷ் ஆகியோருடன் இணைந்து பாடினார் லதா. மன்கஹரி உதாஸ், கிஷோர் குமாரின் மகன் அமித் குமார், முகம்மது ஆசிஸ், வினோத் ரதோத், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோருடன் இணைந்து பாடினார்.

    இளைய தலைமுறையுடன் கைகோர்த்த லதா

    இளைய தலைமுறையுடன் கைகோர்த்த லதா

    1990களில் ரூப் குமார் ரதோத், ஹரிஹரன், பங்கஜ் உதாஸ், முகம்மது ஆசிஸ், அபிஜித் பட்டாச்சாரியா, உதித் நாராயண், குமார் சானு, சுரேஷ் வத்கர் போன்ற மூன்றாம் தலைமுறை பாடகர்களுடன் இணைந்து டூயட் பாடல்களை பாடினார் லதா மங்கஷ்கர். 1990களில் தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே படத்தில் வரும் "Mere Khwabon Mein Jo Aaye", "Ho Gaya Hai Tujhko To Pyaar Sajna", "Tujhe Dekha To Yeh Jana Sanam", மற்றும் "Mehndi Laga Ke Rakhna போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாக குறிப்பிடப்பட வேண்டியவை.

    மூன்றாம் தலைமையிலும் ஹிட் பாடல்கள்

    மூன்றாம் தலைமையிலும் ஹிட் பாடல்கள்

    2000களில் உதித் நாராயண், சோனு நிஜாம் ஆகியோருடன் இணைந்து பல டூயட் பாடல்களை பாடினார் லதா. 2005-06 ஆண்டுகளில் லதா மங்கேஷ்கர் பாடியதில் பலருக்கும் தெரியாத பாடல்கள் என்றால், Bewafa படத்தில் கெய்சி பியா சே, லக்கி : நோ டைம் டு லவ் படத்தில் அத்னன் சாமியுடன் இணைந்து ஷாயத் யேஹி து பியார் ஹேய், 2006 ல் ரங் தே பாசந்தி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லுக்கா சுப்பி பாடலை லதா மங்கேஷ்கர் பாடினார்.

    நான்காம் தலைமுறையிலும் கணீர் குரல்

    நான்காம் தலைமுறையிலும் கணீர் குரல்

    புகர் படத்திற்காக ஏக் து ஹி பரோசா பாடலை பாடினார். நான்காம் தலைமுறையாக வீர் ஜாரா படத்தில் உதித் நாராயணன், சோனு நிகம் , ஜக்ஜித் சிங், ரூப் குமார் ரதோத், குர்தாஸ் மான் ஆகியோருடன் இணைந்து பாடினார். 2014 ல் துன்னோ ஒய்2 படத்திற்காக ஜீனா ஹேய் கியா என்ற பாடல் சமீபத்தில் ஹிட்டான லதா மங்கேஷ்கரின் பாடல்களில் ஒன்று.

    English summary
    Lata Mangeshkar has sang with four generations of singers. She has sung so many super hit duet songs. In her lifetime, she has sung in more than 30 languages. She made history in the recording of her songs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X