இவ்வளவு பண்ணியும் புண்ணியம் இல்லாம போய்டுச்சே.. தேடி வந்து உதவி செய்த சூப்பர் ஸ்டார்!

சென்னை: உடல்நிலை சரியில்லாமல் மோசமான நிலையில் இருந்த போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேடி வந்து உதவி செய்ததாக, போண்டா மணி பேசிய பழைய பேட்டி தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நகைச்சுவை நடிகரான போண்டா மணி செப்டம்பர் மாதம் 19ந் தேதி 1963ம் ஆண்டு இலங்கையில் பிறந்தார். கேதீஸ்வரன் என இயற்பெயர் கொண்ட இவர், 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட போது போண்டாவை மட்டுமே சாப்பிட்டு வந்தார். பசியை தீர்த்து வைத்த போண்டாவையும், தனது குருநாதர் கவுண்டமணியின் பெயரில் இருந்து மணியை சேர்த்து போண்டா மணி என பெயரை மாற்றிக்கொண்டார்.

Late actor Bonda Manis old video is trending on the internet

போண்டா மணி: 1991ல் வெளியான பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் போண்டா மணி. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து முத்து, முறை மாப்பிள்ளை, திருமலை, வின்னர், சுந்தரா டிராவக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சுந்தரா டிராவல்ஸ் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தொடர்ந்து வடிவேலுவுடன் பலத்திரைப்படங்களில் இவர் நடித்ததால், தொடர்ந்து கவனிக்கப்படும் நடிகராக மாறினார். அதில் குறிப்பாக வடிவேலு காம்பினேஷனில், அண்ணேன் சொல்லிடாதீங்க... அடிச்சு கூடா கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க என்ற காமெடி மிகவும் பிரபலமானது.

உயிரிழந்தார்: தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த போண்டா மணி, கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால், மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பழைய பேட்டி: அண்மையில் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், எனக்கு கிட்னி கொடுத்து உதவ, சொந்த பந்தம் யாரும் இங்கு இல்லை. நான் இலங்கைக்காரன். ஒன்னு அங்கே போய் பண்ணனும், இங்கே வந்து கொடுக்க முடியாது. அரசு விதிகள் நிறைய இருக்கு. இல்லையென்றால் நாட்டை விட்டு வெளியே போய் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை பண்ண முடியும். அரசிடம் பதிந்திருப்பதால், கிடைக்க 5 வருடம் கூட ஆகலாம் என்றார்.

புண்ணியம் இல்லாம போச்சே: மேலும் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது உதவி கேட்டு, 10 நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன். அதில் ஒரே ஒரு நடிகரிடம் இருந்து மட்டும் போன் வந்தது. அது வேறுயாரும் இல்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். எதுக்கும் கவலைப்பாடாதீங்க நான் இருக்கிறேன் என்று சொல்லி ஒரு லட்சம் ரூபாயை கொடுத்து அனுப்பினார். இதுக்கு மேல என்ன வேண்டும் என்று பேசி இருந்தார். போண்டா மணி பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவ்வளவு பண்ணியும் புண்ணியம் இல்லாம போச்சே என்று இணையத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X