குட்டி 'சிரு' வந்தாச்சு.. ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் மேக்னா ராஜ்.. செம்ம்ம்ம ஹேப்பியில் குடும்பம்!

பெங்களூரு: மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கன்னட சினிமாத்துறையில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா.

நடிகர் அர்ஜூனின் அக்காள் மகனான இவர் கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் அகால மரணமடைந்தார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

36 வயதில் சிரஞ்சீவி சர்ஜா திடீர் மரணமடைந்தது அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவும் நடிகை மேக்னா ராஜும் 10 ஆண்டுகள் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

குழந்தையை எதிர்பார்த்து..

குழந்தையை எதிர்பார்த்து..

சிரஞ்சீவி சர்ஜா மரணமடைந்த போது மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார. சிரு மரணமடைந்த சில நாட்களுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் தங்களின் குழந்தையை எதிர்பார்க்கும் மகிழ்ச்சியான அறிவிப்பை மேகனா வெளியிட்டார்.

காத்திருக்க முடியாது

காத்திருக்க முடியாது

அதாவது, " நம்முடைய லிட்டில் ஒன் எனக்கு அளித்த விலைமதிப்பற்ற பரிசு - நம் அன்பின் சின்னம் - இந்த இனிமையான அதிசயத்தை கொடுத்த உங்களுக்கு முழுக்க நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நம் குழந்தையாக உங்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வர நான் காத்திருக்க முடியாது. உங்களை மீண்டும் பிடிக்க காத்திருக்க முடியாது.

காத்திருப்பேன்

காத்திருப்பேன்


உங்கள் புன்னகையை மீண்டும் காண காத்திருக்க முடியாது. முழு அறையையும் ஒளிரச் செய்யும் உங்களுடைய சிரிப்பைக் கேட்க காத்திருக்க முடியாது. நான் உங்களுக்காக காத்திருப்பேன், நீங்கள் எனக்காக காத்திருக்கிறீர்கள் என உருக்காமாக பதிவிட்டிருந்தார்.

வளைகாப்பு

வளைகாப்பு

இதனை பார்த்த பலரும் நிச்சயம் சிருவே உங்களுக்கு மகனாக பிறப்பார் என்று கூறினர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்து நடிகை மேக்னாராஜிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிரஞ்சீவி சர்ஜா, மேக்னா ராஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

சிருவே வந்தது போல்

சிருவே வந்தது போல்

இந்த நிகழ்ச்சியில் மறைந்த சிரஞ்சீவி சர்ஜாவின் பேனர், மேக்னா ராஜ் அமர்ந்திருந்த நாற்காலி அருகே வைக்கப்பட்டு இருந்தது. ஆள் உயரத்திற்கு வைக்கப்பட்ட அந்த பேனரின் மூலம் சிரஞ்சீவி சர்ஜாவே நேரில் பங்கேற்றது போல் இருந்தது. பலரும் அதனை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

இந்நிலையில் நடிகை மேக்னா ராஜ் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆண் குழந்தை பிறந்துள்ளதால் நடிகர் சிருவே மீண்டும் பிறந்துள்ளதாக குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அண்ணன் சிருவின் வாரிசை அவரது தம்பியான நடிகர் துருவா சர்ஜா தனது கையில் வாஞ்சையோடு ஏந்தியிருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெள்ளி தொட்டில்

வெள்ளி தொட்டில்

சமீபத்தில் தான் துருவா சர்ஜா தனது அண்ணியான மேக்னா ராஜ்க்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ளித் தொட்டில் ஒன்றை பரிசளித்தார். அந்த தொட்டிலுடன் துருவா சர்ஜா இருந்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X