Marimuthu son: இப்படி ஆகும்னு நினைக்கல.. அப்பாவ விட்டுடேனே கதறி அழும் மாரிமுத்துவின் மகன்!
சென்னை: அப்பாவுக்கு இப்படி ஆகும்னு நினைச்சுக்கூட பாக்கல என்று நடிகர் மாரிமுத்துவின் மகன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இயக்குநரான மாரிமுத்து இரண்டு திரைப்படங்களை இயக்கி இருந்தாலும், அவரை அனைவருக்கும் தெரியவைத்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.
அந்த சீரியலில் இவரின் பேச்சும், உடல் மொழியும் இல்லத்தரசிகளுக்கு பிடித்து போக அனைவரும் இவரை கொண்டாடினார்கள்.

மாரிமுத்து: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வில்லன் வர்மாவின் வலது கையாக நடித்திருந்த மாரிமுத்து, கடந்த வெள்ளிக்கிழமை எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது, வியர்த்து லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டதால், தானாகவே காரை ஓட்டிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டு இருக்கும் போதே அவரது உயிர்பிரிந்தது.
சொந்த ஊரில் தகனம்: இதையடுத்து, சாலிகிராமத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின் மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு சொல்லப்பட்டு அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மகன் அகிலன் தனது தந்தைக்கு கொள்ளி வைத்தார். இந்நிலையில்,மாரிமுத்துவின் மகன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இப்படி ஆகும்னு நினைக்கல: அதில், அப்பாவிற்கு இப்படி ஆகும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை, நான் கூட ஓரளவு மனதை சமாளித்துக்கொண்டேன். ஆனால், தங்கையால் ஏற்றுக்கொள்ளவே முடியல. அப்பாவிற்கு ஏற்கனவே நெஞ்சுவலி வந்து இருக்கிறது. அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்தோம். ஆனால், அப்போது அப்பா வீட்டில் இருந்ததால் நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டோம்.
தனியாக போக இதுதான் காரணம்: ஆனால், இந்த முறை அப்பா, நெஞ்சுவலிப்பதாக போன் செய்தார். ஆனால், முன்பைவிட அதிகமாக வலிப்பதாக கூறியதால், நாங்கள் உடனே ஹாஸ்பிடல் போங்க நாங்க வந்துவிடுகிறோம் என்று சொன்னோம். இதனால் தான் அப்பா தனியாக கார் ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அதுக்குள்ள இப்படி ஆகிவிட்டது.
நான் இருக்கேன்: இப்போது என் தங்கை சென்னையில் வேலை பார்த்துக்கொண்டு இருக்காங்க, அப்ராடு போக வேண்டும் என்பது அவங்க ஆசை, அந்த ஆசையை நிறைவேற்றனும், அப்பா இல்லாததால் எல்லாம் மாறிவிட்டதே என்று இரண்டு பேருமே வருத்தப்படக்கூடாது. அவங்களுக்கு நான் இருக்கேன், எங்களுக்கு அவங்க இருக்காங்க என்னால் முடிந்ததை செய்வேன் என்று கலங்கிய கண்களுடன் மாரிமுத்துவின் மகன் அகிலன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











