Mayilsamy Son: மனிதாபிமானத்தின் மறுபெயர்.. மயில்சாமி நினைவு தினம்.. மகன் செய்ததை பாருங்க!

சென்னை: தமிழ் சினிமா பல நல்ல நடிகர்களை, திறமையான கலைஞர்களையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மிகவும் நல்ல மனிதர்களையும் கடந்த காலத்தில் எதிர் கொண்டுள்ளது. அப்படி தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் மறைந்த நகைச்சுவை நடிகர், பலகுரல் கலைஞர் மயில்சாமி. இவர் கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு மொத்த தமிழ் திரையுலகத்திற்குமே பேரதிர்ச்சியை கொடுத்தது. திரைப்பிரபலங்களை கடந்து பல பொதுமக்கள் அவரது பூத உடலை பார்த்து அழுது கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர். அந்த அளவுக்கு எளிய மனிதர்களுடன் இரண்டறக் கலந்தவர்.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர் அதிமுகவிலும் தன்னை இணைத்துக் கொண்டு பயணித்தார். அதிமுகவின் பேச்சாளராக பல விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அவர் மறைந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிற நிலையில், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி அவரது நினைவு நாளை உலகம் போற்றிட செய்துள்ளார் அவரது மகன் யுவன் பழனிசாமி. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, தனது தந்தையின் நினைவு நாளிலும் அவரை மெச்ச வைத்துள்ளார்.

Late Actor Mayilsamy Son Yuvan Mayilsamy Provide Annadanam At Mayilsamy 3rd Year Death Anniversary

அள்ளிக் கொடுத்த வள்ளல்: தன்னிடம் இருப்பதை எல்லாம் அள்ளிக் கொடுத்துவிட்டு, தனது அடுத்த நாள் வாழ்வாதரத்தை நோக்கி கடைசி வரை ஓடியவர் மறைந்த நடிகர் மாமனிதர் மயில்சாமி. அவரது நினைவு நாளில் அன்னதானம் வழங்கி உள்ளார். அன்னதானமாக பிரியாணி போட்டுள்ளார். பொது மக்கள் பலரும் இந்த அன்னதானத்தில் கலந்து கொண்டு, மறைந்த நடிகர் மயில்சாமியின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

மனிதநேயத்தின் மறுபெயர் மயில்சாமி: ஒருவருக்கு உதவி தேவைப்படுகிறது என்றால் தன்னிடம் இல்லை என்றாலும் திரைத்துறையைச் சேர்ந்த மற்றவர்களிடம் எல்லாம் பணம் கேட்டு அந்த உதவியைச் செய்துள்ளார் என்று திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தெரிவித்துள்ளார்கள். மறைந்த நடிகர் விவேக்கிற்கு மிகவும் பிடித்த மனிதர்களில் நடிகர் மயில்சாமியும் ஒருவர். தான் ஒருமுறை விலை உயர்ந்த காரில் சாய்ந்து நின்றதற்காக அந்த காரின் உரிமையாளரால் அவமானப்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் அதேபோன்ற உயர் ரக காரை அவரது மனைவி அவருக்கு பரிசளித்ததாகவும் தெரிவித்தார் என்று நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X